கோவில்பட்டியில் 158வது கண் சிகிச்சை முகாம்
கோவில்பட்டி புத்துயிர் ரத்ததான கழகம், கிருஷ்ணன் கோவில் சங்கரா கண் மருத்துவமனை, ஐயப்ப பக்தர்கள் யாக சங்கமம் அறக்கட்டளை மற்றும் தூத்துக்குடி மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச்சங்கம் சார்பாக கோவில்பட்டி ஆயிரவைசிய தொடக்கப்பள்ளியில் இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு புத்துயிர் ரத்ததான கழகத்தின் செயலாளர் க.தமிழரசன் தலைமை தாங்கினார். முனைவர்.ஆ.சம்பத்குமார் முன்னிலை வகித்தார், முகாமை கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு நிர்வாகி சுபேதார்.கருப்பசாமி தொடங்கி வைத்தார்.
கண் விழிப்பரிசோதகர் ஜோதிலட்சுமி முகாமில் கலந்து கொண்ட 50க்கும் மேற்ப்பட்டவர்களுக்கு கண் விழிப்பரிசோதனை செய்தார். 18பேர் மேல்சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர்.
முகாமில் ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட சங்கத் தலைவர் உத்தண்டராமன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஆவல்நத்தம் லட்சுமணன், நடராஜபுரம் தெரு பொதுமக்கள் நலவாழ்வு இயக்கத் தலைவர் செண்பகம், பகத்சிங் ரத்ததான அறக்கட்டளையின் காளிதாஸ், ஐயப்ப பக்தர்கள் யாக சங்கமம் பொன்னுத்துரை, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அவ்வையார் செல்வம், தொழிலதிபர் ராமச்சந்திரன், மக்கள் நீதி மய்யம் கட்சி ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு காமராஜர் பேரவை நாஞ்சில் குமார், மற்றும் செவிலியர்கள் மாலதி, சந்தியா ஆகியோர் கலந்துகொண்டனர்.







