`டி’ நமூனா பெற்றவர்களுக்கு காலிமனை இ-பட்டா ; கோவில்பட்டி தாசில்தார் தகவல்
கோவில்பட்டி தாசில்தார் லெனின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கோவில்பட்டி தாலுகா, ஆதி திராவிடர் நல தனி தாசில்தார் மூலம் மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை, மாவட்ட பிற்படுதப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைகள் சார்பில் இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன,
அவற்றுக்கு ஒப்பதல் செய்யப்பட்ட லே அவுட்களில், ஏற்கனவே இலவச வீட்டுமனை ஒப்படை எனப்படும் `டி’ நமூனா பெற்றவர்களுக்கு , காலி மனை இ-பட்டா வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எனவே தங்களிடம் உள்ள `டி’ நமூனா , ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, செல்போன் நம்பர் மற்றும் இப்போது வசித்து வரும் முழு முகவரியுடன் கூடிய ஒரு மனு ஆகியவற்றை சம்பந்தப்பட்ட நிலம் உள்ள பகுதி வி.ஏ.ஓ. வசம் ஒப்படைக்கலாம்.’
இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் நேரடியாக வி.ஏ.ஓ. வசம் ஒப்படைத்து பயன் பெறலாம் மேலும் `டி’நமூனா எனப்படும் ஒப்படை பட்டா வைத்துள்ளவர்கள் மட்டும் மனு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு தாசில்தார் லெனின் கூறி இருக்கிறார்.