பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 116 வது ஜெயந்திவிழா இன்று கொண்டாடப்பட்டது. கோவில்பட்டியில் அரசியல் கட்சியினர்,தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். கோவில்பட்டி மத்திய பகுதி ஒன்றிய ம.தி.மு.க. சார்பில் வடக்கு திட்டங்குளத்தில் அமைந்துள்ள பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நிகழ்வில் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ் ரமேஷ், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயகா ரமேஷ், மாநில கலைத்துறை துணை அமைப் பாளர் கோடையடி ராமச்சந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் […]
ஆதிகவி வால்மீகி முனிவர் ஜெயந்தியை முன்னிட்டு சம்ஸ்கார் பாரதி சார்பாக கோவில்பட்டியில் “சாதனைக் கலைஞர்களின் சங்கமம்” நிகழ்ச்சி நடைபெற்றது. கலைஞர்கள் பலர் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். காலை முதல் மாலை வரை நடந்த இந்த நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கபபட்ட சுமார் 200 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கிக் கவுரவிக்கப்பட்டது
கோவில்பட்டியில் பிரசித்தி பெற் செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கிய விழாவான ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரத்துக்கு பின் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி, கோவில் […]
இந்தியக் கலாச்சார நட்புறவுக் கழகம், பகத்சிங் இரத்ததானக் கழக அறக்கட்டளை இணைந்து கோவில்பட்டியில் இன்று இஸ்ரேல் போரைக் கண்டித்தும், உலக அமைதியை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கலாச்சார நட்புறவுக் கழகத்தின் மாநிலச் செயலாளர் க.தமிழரசன் தலைமை தாங்கினார், தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் முனைவர். ஆ.சம்பத்குமார் மற்றும் பகத்சிங் ரத்ததான அறக்கட்டளையின் தலைவர் மா.காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்& கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் அபிராமி முருகன் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் […]
கோவில்பட்டி பூவனநாதசுவாமி கோவிலுடன் இணைந்த ஸ்ரீதேவி- நீலாதேவி உடனுறை சுந்தரராஜபெருமாள் கோவிலில் திருகலான உற்சவ விழா நேற்று மாலை நடைபெற்றது. மாலை 5,30 மணிக்கு மேல் ஸ்ரீதேவி-நீளாதேவி உடனுறை சுந்தரராஜ பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபவத்தை கண்டு களித்தனர், இரவில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது, விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, கட்டளைதாரர் கண்ணன்-மங்கத்தாய் ஆகியோர் செய்து இருந்தனர்,
கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைப்பெற்றது. வெற்றி விநாயகர், முத்துமாரியம்மன், சந்தன கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்ரமணிய சுவாமி செய்தார். சுற்று வட்டார மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் தங்கவேல், செயலாளர் மாரிச்சாமி, பொருளாளர் லட்சுமணன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளியில் 2 நாட்கள் நடைபெறும் புத்தக கண்காட்சியை மாணவர்களே தொடங்கி வைத்தனர். கண்காட்சியில் தேசத்தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, அறிவியல், அகராதி, இலக்கியம், கட்டுரை, நாவல் ஆகிய தலைப்புகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. மாணவர்களுக்கான புத்தக கண்காட்சியினை 6-ம்வகுப்பு மாணவிகள் சபிஹா, சாதனா. ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். புத்தக கண்காட்சியினை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பார்வையிட்டனர். மேலும் ஆசிரியர்கள், பொதுமக்கள் பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சிக்கு பள்ளி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். […]
கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று இப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகளை சந்தித்து பேசினார். மாணவர்களை சந்தித்த போது கல்வியில் சிறந்து விளங்க அறிவுரை வழங்கினார். மேலும் பள்ளி வளாகத்தில் உள்ள கல்வித்துறை அலுவலகங்களையும் பார்வையிட்டார். மாணவ மாணவிகளுக்கு வழங்கக்கூடிய விலையில்லா பொருட்கள் சேமிப்பு கிடங்குக்கு சென்று பார்வையிட்டதுடன் அதனுள்ளே இருந்த பொருட்கள் பற்றியும் […]
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் தெற்கு இலந்தைகுளம் ஊராட்சிக்குட்பட்ட மானங்காத்தான் கிராமத்தை தத்தெடுத்துள்ளார். 2022 ஏப்ரல் மாதம் பஞ்சாயத்துராஜ் திட்டத்தையொட்டி தெற்கு இலந்தைகுளம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற கனிமொழி. அந்தக் கிராமத்தை தத்தெடுத்து, முன்மாதிரி கிராமமாக மாற்றும் நோக்கில் தத்தெடுப்பதாக அறிவித்தார். இங்கு 1996 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட காலனி வீடுகள் மிகவும் பழுதடைந்து இருந்தது. சிதிலமடைந்திருந்த தொகுப்பு வீடுகளுக்கு மாற்றாக கான்கிரீட் வீடு வேண்டும் என்று கனிமொழி […]
தென்மண்டல அளவிலான சப்-ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி போட்டி சென்னையில் நடந்தது. இப்போட்டியில் தமிழ்நாடு , ஆந்திர பிரதேசம., கர்நாடகா, கேரளா , புதுச்சேரி, தெலுங்கானா ஆகிய 6 மாநில அணி வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர். பல தடைகளை கடந்து ஆண்கள் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு- கர்நாடகா அணிகள் களம் கண்டன. பரபரப்பான இந்த ஆட்டத்தில் கர்நாடக அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது. தமிழ்நாடு அணி 2-வது […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







