செண்பகவல்லியம்மன் கோவில் ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா; நிகழ்ச்சிகள் முழு விவரம்
![செண்பகவல்லியம்மன் கோவில் ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா; நிகழ்ச்சிகள் முழு விவரம்](https://tn96news.com/wp-content/uploads/2023/10/e855915b-ae32-4d96-a8af-efaeda4e5ef9-850x560.jpeg)
கோவில்பட்டியில் பிரசித்தி பெற் செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கிய விழாவான ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரத்துக்கு பின் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
![](https://tn96news.com/wp-content/uploads/2023/10/4cced265-af01-45a4-b1cf-1d85969b0d71-1024x685.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2023/10/bdcf8af4-bd31-48aa-8448-bbe6b6f88655-1024x680.jpeg)
கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி, கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராஜ குரு, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் திருப்பதி ராஜா,ரவீந்திரன், சண்முகராஜ் நிருத்தியலட்சுமி , கோவில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நகர தலைவர் ராஜகோபால், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இன்று முதல் அடுத்த மாதம் 9ந்தேதி வரை 12 நாட்கள் திருவிழா நடக்கிறது. தொடக்க நாளான நேற்று பிராமணாள் சமூக மண்டகப்படி. இரவு புஷ்ப சப்பரத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.
இன்று(திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு பல்லக்கில் அம்மன் திருவீதி உலா, இரவு 7.30 மணி காமதேனு வாகனத்தில் அம்மன் திருவீதி உலா.மண்டகப்படிதாரர்: பூலோக பாண்டியத்தேவர், ரத்தினவேல்ச்சாமி தேவர் குடும்பத்தினர்.
நாளை 31-ந்தேதி முதல் நவம்பர் 9 நிறைவு நாள் வரை நடக்கும் நிகழ்ச்சிகள் முழு விவரம் வருமாறு:-
![](https://tn96news.com/wp-content/uploads/2023/10/db08f5f4-8b27-4dbf-b3bb-82bf61f3a444-1-1024x290.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2023/10/669687e8-853c-4058-abd9-80b07828ef95-799x1024.jpeg)
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)