தென்மண்டல சப்-ஜூனியர் ஆக்கி: தமிழக ஆண்கள், பெண்கள் அணிக்கு 2-வது இடம்  

 தென்மண்டல சப்-ஜூனியர் ஆக்கி: தமிழக ஆண்கள், பெண்கள் அணிக்கு 2-வது இடம்  

தென்மண்டல அளவிலான சப்-ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி போட்டி சென்னையில் நடந்தது. இப்போட்டியில் தமிழ்நாடு , ஆந்திர பிரதேசம., கர்நாடகா, கேரளா , புதுச்சேரி, தெலுங்கானா ஆகிய 6 மாநில அணி வீரர்கள்  கலந்து கொண்டு விளையாடினர். 

பல தடைகளை கடந்து ஆண்கள் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு- கர்நாடகா அணிகள் களம் கண்டன. பரபரப்பான இந்த  ஆட்டத்தில்  கர்நாடக அணி 3-2 என்ற கோல்  கணக்கில்  வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது. தமிழ்நாடு அணி 2-வது இடம் பெற்றது.

 பெண்கள் பிரிவில் ஆந்திர பிரதேசம்-தமிழக அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆந்திர பிரதேசம் அணி  5-0 என்ற கோல்  கணக்கில் தமிழக அணியை வீழ்த்தி  முதலிடம்  பெற்றது.இதனால் தமிழக பெண்கள் அணிக்கு 2 -வது இடம் கிடைத்தது.

 தமிழக ஆண்கள் ஆக்கி அணியின் பயிற்சியாளராக  அரவிந்தன், பெண்கள் ஆக்கி அணியின் பயிற்சியாளராக வேல் முருகன் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு தமிழக அணி வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருந்தனர். வெற்றி பெற்ற வீரர்களையும் பயிற்சியாளர்களையும் ஆக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி தலைவர் மோகன் அருமை நாயகம், செயலாளர் குரு சித்ர சண்முக பாரதி ,பொருளாளர் காளிமுத்து பாண்டியராஜா, துணைத் தலைவர்கள் நாகமுத்து, மணிமாறன், உமா சங்கர், துணைச் செயலாளர் முருகன், மாரியப்பன், சந்தனராஜ், மற்றும் மூத்த வீரர்கள் தெய்வபாலன், சுரேஷ் குமார், கிருஷ்ணமூர்த்தி, தங்கராஜ் உடற்கல்வி ஆசிரியர்கள் முருகன், ராம்குமார், சிவராஜ் , ஆல்ட்ரின் அதிசயராஜ் ஆகியோர் வீரர்களை வரவேற்றனர்.

சிறந்த ஆட்டத்துக்காக  ஆண்கள் அணியில்  சுந்தர் அஜித், சுகுமார், கவுதம், முத்து ராஜேஷ், ஈனோக், முருகேஸ்வரன்,  மற்றும் பெண்கள்  அணியில் ஹரிதா , ராமலட்சுமி, பிரியங்கா , சுவாதி சர்மா ,  ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *