கோவில்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116வது ஜெயந்தி விழாவையொட்டி தேவரின மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அண்ணா பஸ் நிலையம் முன்புறம் உள்ள தேவர் சிலை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நிறுவன தலைவர் வெயிலுமுத்துப்பாண்டியன் தலைமை தாங்கினார். . மாநில பொதுச் செயலாளர் வேம்பு பாண்டியன், பொறுப்பாளர் ஆரியா பாண்டியன், தூத்துக்குடி மாவட்ட தலைவர் துரைப்பாண்டியன், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்கம் நிறுவன தலைவர் செல்வம் […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் பலகாரம் செய்ய தேவையான பொருட்களை மானிய விலையில் வழங்க வலியுறுத்தி தூத்துக்குடி புறநகர் முத்தையாபுரம் 53வது வார்டு ரேஷன் கடை முன்பு ஜனநாயக மாத சங்க புறநகர செயலாளர் கண்ணகி தலைமையில் நூதன போராட்டம் நடைபெற்றது. அதாவது எண்ணெய்க்கு பதிலாக தண்ணீரை பயன்படுத்தி பலகாரம் சுட்டு நூதன போராட்டத்தில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஈடுபட்டனர்.. போராட்டத்தில் மாவட்ட செயலாளர் பூமயில், மாவட்ட குழு உறுப்பினர் சரஸ்வதி, கிளை தலைவர் வெள்ளையம்மாள், […]
கோவில்பட்டியை அடுத்த ஓடைப்பட்டி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வன்னி விநாயகர் கோவிலில் இன்று மாலை சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து தீப ஆராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கோவில் குருக்கள் பிரசன்ன வெங்கடேஷ் செய்திருந்தார்
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு கடந்த 30-ந்தேதி கோவில்பட்டி பஸ் நிலையம் எதிர்புறம் உள்ள தேவர் சிலைக்கு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் தனித்தனியாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். காலை முதல் மாலை வரை பஸ் நிலைய பகுதி பரபரப்பாக இருந்தது. எனினும் போக்குவரத்து நெரிசல் பாதிப்பு எதுவும் இல்லை. இதே போல் நகர் முழுவதும் போக்குவரத்து சீராக இருந்தது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்த துணை கண்காணிப்பளர் வெங்கடேஷ், மேற்கு […]
வருகிற 12 ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் தீபாவளி நாளில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி என்று தமிழக சுற்றுச்சூழல் துறை அறிவித்துள்ளது. தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு அனுமதிக்கப்படுகிறது. நீதிமன்ற உத்தரவுபடி, பசுமைப் பட்டாசு மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும் தீபாவளியன்று காற்றின் தரத்தை மாசுக் கட்டுப்பாட்டு […]
தூத்துக்குடி மாவட்டத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத்திட்டத்தின் கீழ் செயல்படும் 4 பள்ளி சத்துணவு மையங்களுக்கு ஐ.எஸ்.ஓ .தரச்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதியிடம் சென்னைதனியார் . நிறுவனத்தினர் இன்று (31.10.2023) வழங்கினர். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்ததாவது:- மத்திய அரசின் மேலாண்மை, கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு (MME) திட்டத்தின் கீழ் 100 சத்துணவு மைங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று வழங்கிட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு Quest Certification (P) Ltd. என்ற நிறுவனத்தின் மூலம் தமிழ்நாட்டில் தேர்வு செய்யப்பட்ட […]
கோவில்பட்டி நகராட்சி கூட்டம் நகர் மன்ற தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்தது. நகராட்சி ஆணையாளர் கமலா முன்னிலை வகித்தார். உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். .. இக்கூட்டத்தில் இனாம் மணியாச்சி, மூப்பன்பட்டி , இலுப்பையூரணி, திட்டங்குளம் , பாண்டவர்மங்கலம், மந்திதோப்பு, நாலாட்டின் புதூர் உள்ளிட்ட 7 ஊராட்சிகளை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. இந்த தீர்மானம் அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்படும். அதை தொடர்ந்து நிர்வாக பணிகள் தொடரும்.
நாடு முழுவதும் அக்டோபர் -31ம்தேதி (இன்று) இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினம் தேசிய ஒற்றுமை தினமாக கடைபிடிக்கப்பட்டது.. கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் உறுதிமொழி எடுத்துக்கொண்டு பட்டேலின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர்..பின்னர் தேசிய ஒற்றுமை தினம் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம், விவேகானந்த கேந்திரத்தின் பண்பாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி செயலாளர் கண்ணன் […]
தூத்துகுடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் இளயரசனேந்தல் குறுவட்டம் வடக்கு பட்டி கிராமத்தில் உள்ள சாலையை மறித்து சுவர்கள் மற்றும் தெருவின் நடுவில் தென்னை மரங்கள் நடப்பட்டு இருந்தன. ஒரு சமூதாயத்தை சேர்ந்தவர்கள் இந்த பாதையை பயன்படுத்தக்கூடாது என்பதற்காக சிலர் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். கடந்த கடந்த 70 ஆண்டுகாலமாக ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சுவர்களும் தெருவின் நடுவில் நட்டப்பட்ட மரங்களும் நீதிமன்ற உத்தரவுபடி அகற்றுவதற்கு வருவாய்துறை நடவடிக்கை மேற்கொண்டது. இன்று காலை. மேற்படி சாலையில் உள்ள சுவர்களையும் […]
கோவில்பட்டி சவுபாக்யா மஹாலில் ரோட்டரி மாவட்ட 3212 சார்பில் சமுதாயப் பணிகள் குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கு நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கருத்தரங்கு சேர்மன் விநாயகா ரமேஷ் தலைமை தாங்கி வரவேற்றார். ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர்கள் சின்னத்துரை அப்துல்லா, இதயம் முத்து, ஆறுமுகப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அளவிலான கருத்தரங்கினை ரோட்டரி மாவட்ட ஆளுநர் முத்தையா பிள்ளை குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். ரோட்டரி பவுண்டேசன் மண்டல உதவி ஒருங்கிணைப்பாளர் முத்து பழனியப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







