மதுரை ரெயில்வே கோட்டத்தில் அதிக வருவாய் தரும் ரெயில் நிலையங்களில் கோவில்பட்டி ரெயில் நிலையம் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதிக அளவிலான மக்கள் இந்த ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இந்த ரெயில்வே நிலையத்தில் முன்பதிவு செய்ய மற்றும் முன்பதிவு இல்லாத டிக்கெட் பெற ஒரு கவுண்ட்டர் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இதனை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை கிடப்பில் போடப்பட்டு விட்டது. மேலும் இந்த கவுண்ட்டரில் இருக்கும் ஊழியருக்கு தமிழ் தெரியாது. வடமாநிலத்தை சேர்ந்தகர்கள் […]
ஆண்டுதோறும் தை மாதம் உத்தராயன புண்ய காலத்தில் வளர்பிறை சப்தமி திதியில் சூர்ய பகவான் ரதம் வடக்கு நோக்கி திரும்பும் இந்நாளில் அனைத்து சிவ, வைணவ கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறுவது ஐதீகம். இதனையொட்டி கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் காலை 6 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கி,ஸ்தபன கும்பகலச பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூல மந்திர ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. பிறகு வெற்றி விநாயகர், […]
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே கொங்கராய குறிச்சியில் அ.தி.மு.க., பிரமுகர் பிச்சையா என்பவர் கடந்த 10.3.2015 ல் கொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அந்தப்பகுதியில் கலவரம் ஏற்பட்டது. வீடுகள், கார்கள், சிலை சேதப்படுத்தப்பட்டது. இந்த கொலை தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் போலீசார் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம் இன்று தீர்ப்பு வழங்கினார். அதே கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி ராஜ், […]
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் சாம்பல் புதன் எனப்படும் விபூதி புதனோடு 40 நாட்கள் தவக்காலம் இன்று (14ம் தேதி) தொடங்கினர். கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலியின் நடுவே கிறிஸ்தவர்கள் நெற்றியில் திருநீறு(விபூதி) பூசி வழிபடும் திருச்சடங்கு நடைபெற்றது. கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்தில் கிறிஸ்தவ மக்களின் தவக்காலம் சாம்பல் புதன் நிகழ்வுகளுடன் இன்று தொடங்கியது. திருத்தல பங்கு தந்தை அருட்திரு சார்லஸ் அடிகளார்,உதவி பங்கு தந்தை அருட்திரு அந்தோணிராஜ் அடிகளார் இணைந்து திருத்தலத்தில் திருப்பலி […]
கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாலுகா செயலாளர் பாபு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இந்த ஆர்ப்பாட்டத்தில் ரெங்கநாதன் குமராபுரம் கிளை செயலாளர் சரோஜா, .நகர செயலாளர் சேதுராமலிங்கம், மாவட்டம் நிர்வாக உறுப்பினர் பரமராஜ்,மாவட்டம் குழு உறுப்பினர் முனியசாமி, நகர உதவி செயலாளர் கண்ணம்மா,மாவட்டம் குழு உறுப்பினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழக அரசால் செப்டம்பர் 2023 முதல் வழங்கிவரும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தகுதி உள்ள அனைத்து பெண்களுக்கும் […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி உத்தரவின் பேரில், தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் டாக்டர்.ச.மாரியப்பன் தலைமையின் கீழ் ஜோதிபாஸூ மற்றும் செல்லப்பாண்டி ஆகிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழுவினர் கோவில்பட்டியில் நேற்று (13.2.2024) 40 உணவு வணிகர்களிடம் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த 25 கிலோ வடை, பஜ்ஜி, சமோசா, குழம்பு மற்றும் டீ பார்சல் கட்ட வைத்திருந்த 5 கிலோ அனுமதியற்ற பிளாஸ்டிக் பைகளும், வடை […]
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆண்கள் ஆக்கி அணி திருச்சியில் நடைபெற்ற தென் மண்டல பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற போட்டியில் முதல் இடம் பெற்றது. இதன் மூலம் அகில இந்திய பல்கலைக்கழக அளவிலான போட்டிக்கு தகுதி பெற்று பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடைபெற்ற அகில இந்திய பல்கலைக்கழக போட்டியில் கால் இறுதிவரை முன்னேறி கேலோ இந்தியா போட்டிகளுக்கு தகுதி பெற்றது. கேலோ இந்தியா போட்டிகள் வருகிற பிவருகிற 19ஆம் தேதி முதல் 26 வரை அசாம் மாநிலம் கவுகாத்தியில் […]
கோவில்பட்டியை அடுத்த மந்திதோப்பு கிராமத்தில் காசி விசாலாட்சி அம்மாள் சமேத காசி விஸ்வநாதர் திருக்கோவில் உள்ளது. 1000 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் தினமும் இரண்டு கால பூஜைகள் நடந்து வருகிறது. சங்கர பாரதி மடத்திற்கு பாத்தியப்பட்ட இந்த பழமையான கோவிலில் காசி விஸ்வநாதரும், காசி விசாலாட்சியும் கழுகுமலை கோவிலில் உள்ளது போல் ஒரே கரு மண்டபத்தில் தனித்தனியாக காட்சி அளிக்கிறார்கள். காசி விஸ்வநாதர் கரு மண்டபத்தை சுற்றி தட்சிணாமூர்த்தி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர், நடராஜர், காலபைரவர் சன்னதிகள் […]
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எல். பாலாஜி சரவணன்) கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் முக்கிய வழக்கு கோப்புகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் காவல் நிலைய போலீசாருக்கு அவர்கள் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்தும் காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கினார். இந்த ஆய்வின்போது பயிற்சி காவல் உதவி கண்காணிப்பாளர் வாக்கரே அக்சய் அணில் கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை […]
கோவில்பட்டி இலுப்பையூரணி மறவர் காலனியை சேர்ந்த சங்கரபாண்டி மகன் வெள்ளத்துரை (35) இவர் கொத்தனராக பணியாற்றி வருகிறார், இவருக்கு திருமணம் முடிந்து மரியா என்ற(30) வயது மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். இவர் தினமும் வேலாயுதபுரம் நெடுங்குளம் கண்மாய் அருகேயுள்ள கினற்றிற்கு சென்று அங்கே மது அருந்திவிட்டு குளிப்பது வாடிக்கை இந்நிலையில் கேரளாவில் இருந்து வந்த இவரது உறவினர்கள் 2 நபர்களுடன் வழக்கம்போல குளிக்கச் சென்றார். கிணற்றின் அருகே அமர்ந்து மூவரும் மது அருந்தினர். பின்னர் கிணற்றில் […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







