அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே கொங்கராய குறிச்சியில் அ.தி.மு.க., பிரமுகர் பிச்சையா என்பவர் கடந்த 10.3.2015 ல் கொலை செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து அந்தப்பகுதியில் கலவரம் ஏற்பட்டது. வீடுகள், கார்கள், சிலை சேதப்படுத்தப்பட்டது. இந்த கொலை தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் போலீசார் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம் இன்று தீர்ப்பு வழங்கினார்.
அதே கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி ராஜ், ராபின், ரவி, அன்பு பட்டுராஜ் ஆகிய 4பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 1000 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். மற்ற அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இவ்வழக்கில் அரசு தரப்பில் மோகன்தாஸ் சாமுவேல் ஆஜரானார்.







