கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு கோவில்பட்டி நகராட்சி மற்றும் வருவாய் துறை சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை ஆணையாளர் கமலா மற்றும் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டிபாய் ஆகியோர் கொடியசைத்து தொடக்கி வைத்தனர். கல்லூரி மாணவர்கள் வாக்களிப்பதன் விழிப்புணர்வு குறித்த பதாகைகளை கையில் ஏந்தியவாறு நடந்து சென்றனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது, இதில் நகராட்சி செயற்பொறியாளர் […]
கோவில்பட்டி சுபா நகர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்(வயது 43). மதுரை அருகே உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் மற்றும் இவரது குடும்பத்தினர், ராஜபாளையத்தைச் சேர்ந்த உறவினர்கள் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தில் வீட்டை பூட்டிவிட்டு, திருநெல்வேலி சென்றனர். இரவில் அவர்கள் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டனர். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ மற்றும் அலமாரி திறந்து கிடந்தது. அதனுள் இருந்த சதீஷ்குமாருக்கு […]
சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு தொடர் விடுமுறையை முன்னிட்டு கடந்த 3 நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது தூத்துக்குடியை சேர்ந்த சில வாலிபர்கள் இன்று கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். கொடைக்கானலில் உள்ள டால்பின் நோஸ் சுற்றுலா பகுதிக்கு சென்ற அவர்கள், அங்கிருந்த ஒரு பாறையின் விளிம்பிலிருந்து செல்பி எடுக்க முயன்றனர். அப்போது, தன்ராஜ் என்ற வாலிபர் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார்.. இதனால் உடன் இருந்த நண்பர்கள் பதறிப்போனார்கள். உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதை […]
கோவில்பட்டி மில் தெருவில் அமைந்துள்ள மகா புவன காந்தாரி அம்மன் கோவில் பங்குனி மாத பொங்கல் விழாவை முன்னிட்டு கடந்த 26ம் தேதி முகூர்த்தக்கால் நடுவிழா நடைபெற்றது. அதை முன்னிட்டு முதல் நாள் காந்தாரி அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது 2-ம் நாள் அம்மனுக்கு சிறப்பு ஹோமம் அபிஷேகம் நடைபெற்றது 3- நாள் அம்மனுக்கு புஷ்பாஞ்சலி பூஜை நடந்தது. 4- நாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார பூஜை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து தெம்மாங்கு கிராமிய […]
கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய பாஜக சார்பில் தேர்தல் ஆலோசனை கூட்டம் ஒன்றிய தலைவர் மாடசாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் ஆர் பி பாலு முன்னிலை வகித்தார் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர் ..ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து நன்றி கூறினார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி கோவில்பட்டி அருகே நாலாட்டின்புத்தூர் பகுதியில் நேற்று திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார். வழிநெடுக கூடி நின்ற மக்கள் மத்தியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். பிரசசாரத்தில் பேசிய கனிமொழி கூறியதாவது:- தமிழ்நாட்டில் ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள், கலைஞர் மகளிர் உரிமை தொகை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். சில பேருக்கு வரவில்லை என்றால், நிச்சயம் தேர்தல் முடிந்த பிறகு ஒன்றியத்தில் நமது ஆட்சி, இந்தியா கூட்டணி […]
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சிவசாமி வேலுமணியை ஆதரித்து முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ வில்லிசேரி, சத்திரப்பட்டி, இடைச்செவல் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது அவர் பேசியதாவது:- தேசிய கட்சிகளினால் தமிழகத்தின் நலன் பாதுகாக்கப்படுவதில்லைமாற்றான் தாய் மனப்பான்மையுடன் தேசிய கட்சிகள் நடந்து கொள்கின்றன தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் நமது கொள்கைகளை வலியுறுத்த முடியாது தமிழகத்தில் 30 இடங்களில் அதிமுக வெற்றி பெறக்கூடிய சூழ்நிலை உள்ளது […]
கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். தெற்கு குருவிகுளம் பகுதியில் இருந்து கோவில்பட்டி நோக்கி வந்த வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் வந்தவர்களிடம் ரூ.73,700 இருந்தது விசாரணையில் அவர்கள் பொரிகடலை, உளுந்து, சீனி உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்து, வியாபாரிகளிடமிருந்து வசூலித்ததாகக் கூறினர். ஆனால் அவர்களிடம் அதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லை. இதையடுத்து அந்த பணத்தை கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்து, கோவில்பட்டி […]
2000 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இயேசுவின் சிலுவை சாவினை கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் புனித வெள்ளி என்று நினைவு கூர்ந்து கடைப்பிடித்து வருகிறார்கள் . பெரிய வியாழனன்று இயேசு கிறிஸ்துவை யூதாஸ் காட்டிக் கொடுத்தபின் யூதர்களால் சிறைபிடிக்கப்பட்டு அவருக்கு மரண தீர்ப்பிடப்பட்டு பின் இயேசு கிறிஸ்துவிற்கு தலையில் முள்முடி சூட்டப்பட்டு சிலுவையை சுமந்து கல்வாரி மலையை நோக்கி காவலர்கள் இழுத்துச் செல்லும்போது அவரை சவுக்கால் அடித்து துன்பப்படுத்தினார்கள். அவர் உடல் முழுவதும் ரத்தம் சிந்தி சிலுவையில் அறையப்பட்டு […]
கோவில்பட்டியை அடுத்த எட்டயபுரம் அருகில் உள்ள படர்ந்தபுளியில் லியா கைப்பந்து கழகம் நடத்தும் 19-ம் ஆண்டு மாநில அளவிலான கனரா வங்கி கோப்பைக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் கைப்பந்து போட்டி நடக்கிறது. மே மாதம் 11 ,மற்றும் 12 ஆகிய தேதிகளில் லியா கிளப் மைதானத்தில் காலை 8 மணிக்கு போட்டிகள் நடைபெற இருக்கிறது, ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணியில் வெற்றி பெரும் 8 அணிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட இருக்கிறது. மேலும் 5 அடி உயரத்தில் […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







