• April 28, 2024

புனித வெள்ளி: கிறிஸ்தவர்கள் சிலுவைப்பாதை பவனி 

 புனித வெள்ளி: கிறிஸ்தவர்கள் சிலுவைப்பாதை பவனி 

2000 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இயேசுவின் சிலுவை சாவினை கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் புனித வெள்ளி என்று நினைவு கூர்ந்து கடைப்பிடித்து வருகிறார்கள் .

பெரிய வியாழனன்று இயேசு கிறிஸ்துவை யூதாஸ் காட்டிக் கொடுத்தபின் யூதர்களால் சிறைபிடிக்கப்பட்டு அவருக்கு மரண தீர்ப்பிடப்பட்டு பின் இயேசு கிறிஸ்துவிற்கு தலையில் முள்முடி சூட்டப்பட்டு சிலுவையை சுமந்து கல்வாரி மலையை நோக்கி காவலர்கள் இழுத்துச் செல்லும்போது அவரை சவுக்கால் அடித்து துன்பப்படுத்தினார்கள்.

அவர் உடல் முழுவதும் ரத்தம் சிந்தி சிலுவையில் அறையப்பட்டு சிலுவை மரத்தில் தொங்க விடப்பட்டார். இதை நினைவு கூறும் வண்ணம் கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்தில் காலை 5 மணி முதல் மாலை 3 மணி வரை மவுன ஆராதனை நடைபெற்றது .

மாலை 4.30மணிக்கு திருத்தல வளாகத்தில் இயேசு கிறிஸ்து 14 ஸ்தலங்களில்  சிலுவையை சுமந்து தலையில் முள்முடி சூட்டப்பட்டு காவலர்களால் சவுக்கால் அடித்து 

துன்பப்படுத்தியதை நினைவு கூர்ந்து இறை மக்கள் இந்நிகழ்ச்சியை நிகழ்ச்சியாக  நடத்தினர்.

 பின்னர் ஆலயத்தில் திருத்தல பங்கு தந்தை சார்லஸ் அடிகளார், உதவி பங்குத்தந்தை அந்தோணி ராஜ் அடிகளார், பெங்களூரு பங்குத்தந்தை பேசில் ஆகியோர் இணைந்து திருப்பலி பீடத்தின் முன் முகம் குப்புற விழுந்து கடவுளின் முன்பாக நாம் அனைவரும் வெருமையே என்று காட்டுவதற்காக முகம் குப்புற விழுந்தனர்.  

பிறகு சிறப்பு இறைவாசகங்களும் மன்றாட்டுக்களும் தொடர்ந்து நற்கருணை பகிர்தலும் ,சிலுவையை முக்தி (முத்தம்)செய்தலும் நடைபெற்றது இறுதியில் கோவில்பட்டி டவுன் பள்ளிவாசல் முத்துக்கனி ராவுத்தர் குடும்பத்தார் சமய நல்லினக்திற்காக இறைமக்கள் அனைவருக்கும் .நோன்பு கஞ்சி வழங்கினார்கள்.

 பள்ளி வாசல் தலைவர் முகமது யூசுப் பள்ளிவாசல் அஷ்ரத் முகமது அலி, சம்சுதீன்  ஆகியோர் இணைந்து வந்திருந்த இறை மக்களுக்கு நோன்பு கஞ்சி வழங்கினார்கள் இதில் ஏராளமான இறை மக்கள் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *