தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி ஊர்வலம்
![தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி ஊர்வலம்](https://tn96news.com/wp-content/uploads/2024/04/f16c9799-777f-4e13-948c-ae2f9c4312c0-850x560.jpeg)
கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு கோவில்பட்டி நகராட்சி மற்றும் வருவாய் துறை சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலத்தை ஆணையாளர் கமலா மற்றும் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டிபாய் ஆகியோர் கொடியசைத்து தொடக்கி வைத்தனர். கல்லூரி மாணவர்கள் வாக்களிப்பதன் விழிப்புணர்வு குறித்த பதாகைகளை கையில் ஏந்தியவாறு நடந்து சென்றனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது,
![](https://tn96news.com/wp-content/uploads/2024/04/8e47def0-c158-4467-b163-b587d8d4a7f4.jpeg)
இதில் நகராட்சி செயற்பொறியாளர் சணல்குமார், கயத்தார் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தங்கையா,விஏஓ மந்திரசூடாமணி மற்றும் கோவில்பட்டி நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)