சிவாஜி கணேசன் பற்றி டுவிட்:முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வனுக்கு சிவாஜி சமூகநலப்பேரவை கண்டனம்
நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை தலைவர் கே.சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது இப்போது அ.தி.மு.கவில் யார் கூட்டும் பொதுக்குழு பெரியது. எந்தக் கூட்டம் ஒரிஜினல், எந்தக் கூட்டம் டூப்ளிகேட்? ஆட்சியிலிருந்தபோது யார் ஊழல்செய்து யார் அதிகம் சம்பாதித்தது போன்ற சண்டைகள்தான் மீடியாக்கள் மட்டுமின்றி, நீதிமன்றங்கள் வரை சந்தி சிரித்துக் கொண்டிருக்கின்றன. அது அவர்களுடைய உட்கட்சி விவகாரம் என்பதால் அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. ஆனால், இவர்களின் சச்சரவில் தேவையில்லாமல் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் பெயரையும் இழுத்திருப்பதுதான் கண்டிக்கத்தக்கதாகும். அ.தி.மு.க. […]







