பா.ஜனதா ஐ.டி.விங் மாநில தலைவராக சவுக்கு சங்கர் நியமனம்
பா.ஜனதா ஐ.டி.விங் மாநில செயலாளர் திலீப் கண்ணன். மாநில தலைவர் நிர்மல் குமார் ஆகியோர் சமீபத்தில் தங்கள் பதவியில் இருந்து விலகினார்கள்.
இந்த நிலையில் திலீப் கண்ணன், அதிமுக இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தார்.
இந்த சூழ்நிலையில் பா.ஜனதா ஐ.டி.விங் மாநில தலைவர் மற்றும் செயலாளர், பொறுப்புகளுக்கு சவுக்கு சங்கர், பிரதீப் ஆகியோரை கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நியமித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-‘
தமிழக பா.ஜ.க.தொண்டர்கள் அனைவருக்கும் மாநில தலைமைமையின் அன்பு வேண்டுகோள். கடந்த சில தினங்களாக தமிழக பா.ஜ.க.வில் திகழும் மாற்றங்கள் மன வேதனையை ஏற்படுத்துகின்றன.
நான் எங்கோ ஓர் கிராமத்தில் ஆடு மேய்த்து கொண்டு இருந்தேன். பா.ஜ.க.தான் என்னை இந்த நாற்காலியில் அமர வைத்தது.. எனக்கு கட்சியின் கொள்கைகளோ கோட்பாடுகளோ தெரியாது. அதை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமோ எனக்கு இல்லை என்று கருதுகிறேன்.
எனது தலைமையை வெறுத்து கட்சியில் இருந்து வெளியேற விரும்பும் நபர்கள் தாராளமாக வெளியேறி கொள்ளுங்கள். ஏற்கனவே வெளியேறியவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க.
பதவியில் இருந்து வெளியேறிய நபர்களின் இடத்திற்கு புதிய பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டிய நிர்பந்தத்தில் கட்சி உள்ளது. அதன் அடிப்படையில் தமிழக பா.ஜ.க..ஐ.டி.விங் தலைவராக அனைவரும் அறிந்த முகமான பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் மற்றும் ஐ.டி.விங் மாநில செயலாளராக பிரதீப்( வாய்ஸ் ஆப் சவுக்கு) ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர் என்பதை இந்த அறிக்கை வாயிலாக தலைமை தெரிவித்து கொள்கிறது.
இவ்வாறு அண்ணாமலை கூறி இருக்கிறார்.