அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்பதை யாராலும் தடுக்க முடியாது; கடம்பூர் செ.ராஜூ பேச்சு
கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன் அன்புராஜ், மகேஷ், பேரூராட்சி செயலாளர்கள் முத்துராஜ் ,கப்பல் ராமசாமி ,வாசமுத்து ,ராஜ்குமார், நகர செயலாளர் விஜயபாண்டியன் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, வழக்கறிஞர் பிரிவு சங்கர் கணேஷ், ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் நீலகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ, அதிமுக கலை இலக்கிய அணி செயலாளர், முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன், தலைமைக் கழக பேச்சாளர் குமுதா பெருமாள் ஆகியோர் சிறப்புரையாற்றினர்
கூட்டத்தில் கடம்பூர் செ.ராஜூ பேசுகையில் கூறியதாவது:-‘
அதிமுக தலைமை கழகத்தில் வரும் 9 ,10.ந்தேதி நடைபெறும் . கூட்டத்திற்கு பின்னர் பொதுசெயலாளர் பதவிக்கான தேர்தல் தேதி அறிவிப்பு இருக்கலாம் ,அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்பதை யாராலும் தடுக்க முடியாது…நீதிமன்றம், தொண்டர்கள் தீர்ப்பு அளித்து விட்டனர் எடப்பாடி பழனிச்சாமி தான் பொதுச்செயலாளர் என்று.
, திமுக தேர்தல் வாக்குறுதி அடங்கிய புத்தகத்தை தலையணை என்று நினைத்து மக்கள் தூங்கிய காரணத்தினால் திமுக ஆட்சிக்கு வந்து விட்டது..எப்போது விடியும் என்று மக்கள் காத்து இருக்கின்றனர்.நானும் ரவுடி தான் என்பது போல நாங்கள் தான் அதிமுக என்று கூறியவர்கள் ஈரோடு இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் கூட செய்யாமல் ஓடி விட்டனர்.
3 முறை இழந்த கட்சி சின்னத்தை மீண்டும் பெற்ற கட்சி அதிமுக தான்..ஜெயலலிதாவை எதிர்த்து பேசிய தேமுதிக தேய்ந்து காணமால் போய் விட்டது.திருமங்கலம் பார்முலாவை தொடங்கி வைத்து , இன்றைக்கு ஈரோடு பார்முலாவை உருவாக்கியுள்ளனர்.
அதிமுக தோற்றது நல்லது தான்… ஜெயித்து இருந்தால் எங்களுக்கு மெத்தனம் வந்துவிடும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்களை சந்தித்தால் கேள்வி கேட்பார்கள் என்று நினைத்த திமுக மக்களை செட்டில் அடைத்து வைத்தனர்.சாப்பாடு கொடுத்து மொய்யும் கொடுத்தது திமுக என்றும், மொய் – கை – இது தான் -ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திமுக பார்முலா ,
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக- மாநில தேர்தல் ஆணையம் கூட்டணி வைத்திருந்தது.உண்மை தான் – தேர்தல் ஆணையம் என் மீது வழக்கு போட்டாலும் பரவாயில்லை..சிறு குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவது போல ஈரோடு கிழக்கு தொகுதி மக்களை திமுக ஏமாற்றி உள்ளது
இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தாலும் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பை ஏற்று உள்ளோம். ஆர் கே நகர் தேர்தலில் டிடிவி தினகரனுக்கு , 20ரூ டோக்கன் சிஸ்டம் கொடுத்தவர் தமிழகத்தின் ஏக்நாத் சின்டே அமைச்சர் செந்தில் பாலாஜி என்றும்,நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்..2026ல் தனியாக சட்டமன்ற தேர்தல் வந்தால் திமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது
இவ்வாறு கடம்பூர் ராஜூ பேசினார்.