தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேர போலீஸ் வேட்டை; 3 நாட்களில் 174 வாகனங்கள் பறிமுதல்
ஏ.ஐ.தொழில்நுட்ப போட்டோ
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிர்நாடு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூரபப்ட்டு இருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை ஆப்ரேஷன் ஷீல்ட் நெட் குற்றம் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிரான ஒருங்கிணைந்த தடுப்பு காவல்துறை நடவடிக்கை. மேற்கொள்ளப்பட்டது.

இந்த நடவடிக்கையின்படி கடந்த 3 நாட்களில் ரவுடிகள், போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்களுக்கு எதிராக தூத்துக்குடியில் 20.5.2026 அன்று “ஆபரேஷன் ஷீல்ட்நெட்” (Operation SHIELDNET) தொடங்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, 75 இடங்களில் தீவிர வாகன சோதனைகள் ஏற்பாடு செய்யப்பட்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 234 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 174 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
47 அதிவேக மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல், 30 அதிக வேகம் மற்றும் 47 மதுபோதையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட மொத்தம் 234 மோட்டார் வாகன சட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் இந்நடவடிக்கையில் மொத்தம் 291 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் (Rowdies) கண்டறியப்பட்டு, அவர்கள் மீது பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எச்சரிக்கை மற்றும் பிணைப்பத்திரம் (Bind over) போன்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் தாளமுத்துநகர் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளியான நான்கு கொலை முயற்சி வழக்குகள் உட்பட 14 முந்தைய வழக்குகளை கொண்ட முத்துமல்லையா ராஜ் என்ற மல்லையா (39) என்பவருக்கு எதிரான ஜாமீன் ரத்து செய்யப்பட்டது.
பொதுஅமைதிக்குக் குந்தகம் விளைவிப்பவர்களுக்கு எதிராக மொத்தம் 6 பிணையில் வெளிவர முடியாத வாரண்டுகள் (Non-Bailable Warrants) நிறைவேற்றப்பட்டன. கஞ்சா மற்றும் குட்கா குற்றவாளிகளுக்கு எதிராக மொத்தம் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து மொத்தம் ஒன்றரை கிலோ கிராம் தடைசெய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் மதுவிலக்கு சட்டத்தை மீறிய குற்றவாளிகளுக்கு எதிராக மொத்தம் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த அதிரடி சோதனை நடவடிக்கை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது,.







