கோவில்பட்டியில் அகில இந்திய ஆக்கி போட்டி தொடக்கம்
கோவில்பட்டியில் ஒவ் வொரு ஆண்டும் நடை பெறும் அகில இந்திய அளவிலான ஆக்கி போட்டி மிகவும் புகழ் பெற்றது. இந்த ஆண்டுக்கான போட்டி இன்று (மே 22) காலை தொடங்கியது
கோவில்பட்டி கிருஷ்ணா நகர் செயற்கை புல்வெளி மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டி மே 30 வரை நடைபெறுகிறது போட்டிகளை மத்திய சரக்கு மற்றும் சேவை வரி பிரிவு கண்காணிப்பாளர் எம்.டி.எம்.மாசிலாமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்,.

முதல் லீக் போட்டியில் புதுடெல்லி இந்திய விமானப்படை அணியும், சென்னை இன்கம் டேக்ஸ் அணியும் மோதின. இதில் 3 2 என்ற கோல் கணக்கில் புதுடெல்லி இந்திய விமானப்படை அணி வெற்றி பெற்றது.
2வது லீக் ஆட்டத்தில் ஜம்ஷெட்பூர் நேவல் டாடா ஆக்கி அகாடமி அணியுடன் பெங்களூரு சதர்ன்கமெண்ட்அணி மோதியது. இதில், 2 1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு சதர்ன் கமெண்ட் அணி வெற்றி பெற்றது.
3வது லீக் ஆட்டத்தில் புதுடெல்லி காம்ப்ட்ரோ லர் அண்ட் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணியும், பெங்களூரு ஆக்கி கர்நாடகா அணி யும் மோதின.புதுடெல்லி காம்ப்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணி 5 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது

4வது லீக் ஆட்டத்தில் செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரெயில்வே அணி யுடன் ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு அணி மோதி யது. இதில் 5 1 என்ற கோல் கணக்கில் செகந்தி ராபாத் அணி வெற்றி பெற்றது. இப்போட்டியை கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து வந்த ஆக்கி ரசிகர்கள் கண்டு களித்தனர்.







