ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் நினைவு தினத்தில் தவெகவினர் அஞ்சலி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்ப்பு போராட்டத்தின் போது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 15பேர் உயிரிழந்தனர். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் 8-ம் ஆண்டு நினைவு தினம்நேற்று கடைபிடிக்கப்பட்டது.

கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்வில், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
முன்னதாக, கோவில்பட்டி பங்களா தெருவில் தமிழக வெற்றிக் கழகத்தின் மத்திய ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா நடந்தது.
நிகழ்ச்சிகளில், தவெக கட்சி மாவட்ட, நகர, ஒன்றிய, வார்டு, கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.








