• November 16, 2026

Month: October 2026

கோவில்பட்டி

பருவமழை எச்சரிக்கை: தூத்துக்குடி மாவட்ட நீர்நிலை பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு 

 தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக இன்று (23.10.2026) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன், நீர்நிலைப் பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் , டி. சண்முகபுரம் ஊராட்சி, ஆத்திக்கிணறு குளத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் ,  எஸ்.கைலாசபுரம் ஒடையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்  ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் , கொம்பாடி ஒடையினை பார்வையிட்டார். மேற்கண்ட ஓடைகளில் கன மழையினால் நீர்வரத்து அதிகரித்தால் என்ன […]

செய்திகள்

வேளாண்மை துறையில் 69 பேருக்கு பணி நியமன ஆணை; முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார் 

 தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- வேளாண்மை-உழவர் நலத் துறையின் திட்டங்களைக் கள அளவில் செயல்படுத்திவரும் உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்  பணியிடங்களில் அவ்வப்போது ஏற்படும் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட 26 உதவி வேளாண்மை அலுவலர்கள், 43 உதவிதோட்டக்கலை அலுவலர்கள் என மொத்தம் 69 நபர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பணிநியமன ஆணைகளை […]

கோவில்பட்டி

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா; 25 ம் தேதி

 பிரசித்தி பெற்ற கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவில் ஐப்பசி  திருக்கல்யாண திருவிழா 25.10.2026 ஞாயிற்றுக்கிழமை  காலை 7 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் கொடியேற்று விழாவுடன் தொடங்குகிறது. ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ந்து 5.11.2026 வியாழக்கிழமை விழா நிறைவடைகிறது.  24.10.2026) சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் அங்குரார்ப்பணம் நடக்கிறது. ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா நிகழ்ச்சி நிரல் வருமாறு:- 1 வது திருநாள் : 25.10.2026 ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றம் ரேவதி […]

தூத்துக்குடி

மக்கள் பிரதிநிதிகளை புறக்கணித்துவிட்டு அதிகாரிகள் செயல்பட்டால் மக்களுக்கு பயனளிக்காது; கனிமொழி எம்.பி. 

தி .மு.க. துணை பொதுச்செயலாளர்  கனிமொழி எம். பி., தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- மழைக்காலத்தில் மழைநீர் விரைவாக கடலுக்கு செல்வதற்கு தேவையான பணிகள் என்னென்ன நடைபெற்று வருகின்றன? தண்ணீர் செல்லும் வழித்தடங்களில்  ஏதேனும் அடைப்புகள் உள்ளனவா? அவற்றை சரி செய்ய தேவையான பணிகள் என்னென்ன? என்பதை கவனித்து வருகிறார் நம்முடைய மேயர். இந்த பணிகளை  ஆய்வு செய்வதற்காக இன்று வந்திருக்கிறேன். இதற்கு முன்னர், தூத்துக்குடியிலிருந்து மழைநீர் கடலுக்கு செல்வதற்கு  3 வழித்தடங்கள் மட்டுமே இருந்தன. ஆனால், தி.மு.க. […]

கோவில்பட்டி

கோவில்பட்டி ஒன்றியத்துடன் 12 ஊராட்சிகள் இணைப்பு : கிராம மக்கள் மகிழ்ச்சி கொண்டாட்டம்

தென்காசி மாவட்டம் குருவி குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இளையரசனேந்தல் பிர்காவைச் சேர்ந்த 12 ஊராட்சி கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகாவுடன் 1.5.2008-ல் இணைக்கப்பட்டது.  மற்ற துறைகள் இணைக்கப்பட்ட நிலையில் ஊரக உள்ளாட்சித் துறையைச் சேர்ந்த இளையரசனேந்தல் பிர்காவில் அடங்கிய அப்பனேரி, அய்யனேரி உள்பட12 ஊராட்சிகள் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்காமல் இருந்தன.   இதனால் 12 ஊராட்சிகள் மட்டும் தென்காசி மாவட்டத்தில் இடம்பெற்று இருந்தது. 12 ஊராட்சிகளை கோவில்பட்டி ஒன்றியத்தில் இணைக்க தொடரப்பட்ட வழக்கில் உயர் […]

சினிமா

பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்

பிரபல பின்னணி பாடகர் ஆர்.கிருஷ்ணராஜ் காலமானார். அவருக்கு வயது 75. சேலம் வேம்படிதாளத்தை பூர்வீகமாகக் கொண்ட ஆர்.கிருஷ்ணராஜ் தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான குரலால் முத்திரை பதித்தவர்.  ‘வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா’, ‘தஞ்சாவூர் மண்ணு  எடுத்து’, ‘கண்ணும் கண்ணும் பார்த்துகிட்டா’, ‘சோக்கு சுந்தரி’ உள்ளிட்ட பாடல்களை பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.  சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த கிருஷ்ணராஜ், உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரபல இசையமைப்பாளர்  தேவா கடந்த […]

செய்திகள்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது ; தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி, தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் மிக கனமழையும், 13 மாவட்டங்களில் கனமழையும், அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் எம்.ஜி.ஆர். நகரில் 15.4 செ.மீ. மழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும்? என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் துரை நிருபர்களிடம் கூறியதாவது:- தென் மேற்கு வங்கக்கடல் […]

செய்திகள்

ஈரோடு கலெக்டர் சென்ற கார் மோதி விவசாயி பலி

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள வெள்ளாளபாளையம் பிரிவில் மாவட்ட கலெக்டர் கந்தசாமி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஸ்கூட்டர் மீது கார் மோதியதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் ஸ்கூட்டரில் சென்ற வெள்ளாங்கோயிலை  சேர்ந்த விவசாயி சண்முகம் என்பவர் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். விவசாயி சண்முகம் தனது ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிப்பதற்காக வட்டாரப் போக்குவரத்து (RTO) அலுவலகத்துக்குச் சென்றுவிட்டு வெளியே வந்தபோது இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் […]

செய்திகள்

சென்னை தியாகராய நகரில் மழை நீர் தேங்கிய பகுதிகளில் அமைச்சர் ஆனந்த் ஆய்வு 

சென்னை தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான  ஆனந்த், வடகிழக்குப் பருவமழையின் காரணமாக தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, இருசக்கர வாகனத்தில் தொகுதி முழுவதும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மழைநீர் தேங்கியுள்ள இடங்களைக் கண்டறிந்து, அப்பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். மேலும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  தலைமையில்  ‘காவலர் வீர வணக்க நாள்’ 

இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில் நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் பணியில் வீர மரணம் அடைந்த அனைத்து காவலர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 21ம் தேதி வீர வணக்க நாளாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (21.10.2026) தூத்துக்குடி மாவட்டம், தெற்கு காவல் நிலையத்தில்  உள்ள காவலர் நினைவு சின்னத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தரா. சிவ பிரசாத்  நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் பணியில் தன்னுயிர் நீத்த காவலர்களுக்கு மலர்வளையம் வைத்து […]