ராஜீவ் காந்தி விளையாட்டு கழகத்தின் 29 வது ஆண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஆண்கள் ஆக்கி போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது. இப் போட்டியில் மொத்தம் 16 அணிகள் கலந்து கொண்டு விளையாடின இரண்டாவது நாளான நேற்று காலை நடந்த முதலாவது கால் இறுதி ஆட்டத்தில் இலுப்பை யூரணி 11s ஆக்கி கிளப் அணி 2-1 என்ற கோல் கணக்கில் எஸ் எம் பி அணியினரை வெற்றி பெற்றனர் இரண்டாவது கால் இறுதிப் போட்டியில் […]
தொழிற்சாலைகளில் 75 சதவீதம் வேலைவாய்ப்பை உள்ளூர் இளைஞர்களுக்கே வழங்கும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற
பா.ம.க. தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணியின் மனைவியும், எம்.எல்.ஏ.வுமான சவுமியா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சவுமியா அன்புமணி எம்.எல்.ஏ. கூறியதாவது: இன்று தூத்துக்குடி, நாளை திருநெல்வேலி, நாளை மறுநாள் நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்துள்ளேன். நாளை தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலப்பதாகத் தொடர்ந்து புகார்கள் வந்துள்ள நிலையில், அதனை நேரில் ஆய்வு செய்ய உள்ளேன். முன்னதாக அன்புமணி ‘தாமிரபரணி காப்போம்’ […]
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: ஜப்பானில் நடைபெற்றுவரும் 20-வது ஆசிய விளையாட்டுகளில், ஆடவர் கிரிக்கெட் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய ஆடவர் அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக க ரூ.75 லட்சம் வழங்கப்படும். அவரது வெற்றி […]
ராஜீவ் காந்தி விளையாட்டு கழகத்தின் 29 வது ஆண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஆண்கள் ஆக்கி போட்டி கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இன்று தொடங்கியது. நாளையும் நடக்கிறது. இன்று காலை முதல் போட்டியை வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி துணை தலைமை ஆசிரியர் அந்தோணி வீனஸ் பில்டர்ஸ் உரிமையாளர் அஸ்வின் குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்,’ கோவில்பட்டி ஆக்கி அகாடமி மற்றும் திட்டங்குளம் 11 ஆக்கி கிளப் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி இதுவரை சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட 38 நபர்களை கைது செய்து 15 நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டு அவர்களிடமிருந்து 1495 மதுபாட்டில்கள் பறிமுதல்.காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு அரசு அனைத்து மதுபான கடைகளுக்கும் நேற்று 2 -ந்தேதி முழு கடையடைப்பு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு இருந்தது, அதே சமயம் முழு கடையடைப்பின் போது சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபடுபவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள தூத்துக்குடி […]
கூட்டுறவு சங்கங்களில் நிலுவையிலுள்ள பயிர்க்கடனை வசூலிப்பது முற்றிலும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்று நிலுவையிலுள்ள பயிர்க் கடன்கள் வசூலிக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரால் மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குனர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக அனுப்பப்பட்டு, அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் தவறாது கடைப்பிடிக்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சில […]
தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தென்தாரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:- பதவியில் இருந்த ஒரு கட்சியில் இருந்து பதவியை ராஜினாமா செய்து விட்டு, மீண்டும் அதே பதவிக்கு போட்டியிடுவது வெட்கக்கேடானது. இவர்கள் மக்க ளுக்கு உண்மையாக இருக்க வாய்ப்பே இல்லை. வாக்காளர்கள் த.வெ.க. வேட் பாளர் வாக்கு சேகரிக்கும் போது காட்டும் எதிர்ப்பை வாக்குப்பதிவு நாளன்று காட்ட வேண்டும். த.வெ.க. […]
கோவில்பட்டி நகரின் இதயம் போன்ற பகுதியாக இளையரசனேந்தல் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக சென்னை, திருநெல்வேலி செல்லக்கூடிய பைபாஸ் சாலை, கூடுதல் பஸ் நிலையம், ராஜபாளையம் செல்லலாம். இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன, கோவில்பட்டி நகரில் இருந்து இந்த சாலைக்குள் நுழையும் இடத்தில் ரெயில்வே சுரங்க பாலம் உள்ளது, தொடக்கத்தில் மேம்பாலம் அமைய இருந்தது. வியாபாரிகள் மற்றும் சில அமைப்புகளின் எதிர்ப்புகள் காரணமாக மேம்பாலம் என்பது சுரங்கபாலமாக மாறியது. ஆக்கிரமிப்புகள் காரணமாக […]
வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள 4,887 ஏரிகள் நீரின்றி வறண்டுள்ளன. இதனால் 14 மாவட்டங்களில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை பராமரிப்பில் 14,141 ஏரிகள் உள்ளன. தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாக பெய்ததால், பல்வேறு மாவட்டங்களில் நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் 4,887 ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. குறிப்பாக கடலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, […]
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கோவில்பட்டியில் மகாத்மா காந்தி ரத்ததான அறக்கட்டளை சார்பில் ஆட்டோ பேரணி நடைபெற்றது. கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பிருந்து புறப்பட்ட பேரணியை தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள்சாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஒலிம்பிக் தீபத்தை அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் சீனிவாசன், ஏற்றி வைத்தார். கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் (பொ) ஆர் எஸ் ரமேஷ் மகாத்மா காந்தி ரத்ததான கழக அறக்கட்டளை கொடியை ஏற்றி […]







