முழு கடையடைப்பின் போது சட்டவிரோத மதுபான விற்பனை; 38 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி இதுவரை சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட 38 நபர்களை கைது செய்து 15 நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டு அவர்களிடமிருந்து 1495 மதுபாட்டில்கள் பறிமுதல்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு அரசு அனைத்து மதுபான கடைகளுக்கும் நேற்று 2 -ந்தேதி முழு கடையடைப்பு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு இருந்தது,

அதே சமயம் முழு கடையடைப்பின் போது சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபடுபவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா. சிவபிரசாத் உத்தரவிட்டு இருந்தார்,.
இதன்பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் அந்தந்த உட்கோட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் சட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்கும் பொருட்டு தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.
இதில் , மாவட்டத்தில் அனைத்து உட்கோட்டங்களிலும் மொத்தம் 35 வழக்குகள் பதிவு செய்து 38 நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து மொத்தம் 1495 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்யப்பட்டது.. கைதானவர்களில் 15 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.







