கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:
ஜப்பானில் நடைபெற்றுவரும் 20-வது ஆசிய விளையாட்டுகளில், ஆடவர் கிரிக்கெட் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய ஆடவர் அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக க ரூ.75 லட்சம் வழங்கப்படும். அவரது வெற்றி இளைய தலைமுறையினருக்கு புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும். வாஷிங்டன் சுந்தர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்!.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.







