தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஆண்கள் ஆக்கி போட்டி; கோவில்பட்டியில் தொடக்கம்
Oplus_16908288
ராஜீவ் காந்தி விளையாட்டு கழகத்தின் 29 வது ஆண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஆண்கள் ஆக்கி போட்டி கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இன்று தொடங்கியது. நாளையும் நடக்கிறது.
இன்று காலை முதல் போட்டியை வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி துணை தலைமை ஆசிரியர் அந்தோணி வீனஸ் பில்டர்ஸ் உரிமையாளர் அஸ்வின் குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்,’
கோவில்பட்டி ஆக்கி அகாடமி மற்றும் திட்டங்குளம் 11 ஆக்கி கிளப் அணியினருக்கு இடையே நடைபெற்ற போட்டியில் 1-1 என்ற கோல் கணக்கில் சம நிலையில் முடிவு பெற்றது இதனால் டை பிரேக்கர் முறை கடைப்பிடிக்கப்பட்டது,. இதில் 6-5 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி ஆக்கி அகாடமி அணி வெற்றி பெற்றது

இரண்டாவது போட்டியில் எஸ் எம் பி ஆக்கி கிளப் அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் ஸ்ரீ செண்பகவல்லி ஆக்கி கிளப் அணியினர் வெற்றி பெற்றனர்
மூன்றாவது போட்டியில் செயின்ட் பால்ஸ் ஆக்கி கிளப் 5-4 என்ற கோல் கணக்கில் செல்லையா ஆக்கி அகாடமி அணியினரை வெற்றி பெற்றனர்
நான்காவது போட்டியில் நாசரேத் மர்காசியஸ் ஆக்கி கிளப் 5-1 என்ற கோல் கணக்கில் ராயல் ஹிட்டர்ஸ் அணியினரை வெற்றி பெற்றனர்
போட்டி தொடக்க நிகழ்ச்சியில் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் குரு சித்ர சண்முக பாரதி பொருளாளர் காளிமுத்து பாண்டியராஜா உடற்கல்வி ஆசிரியர்கள் முருகன், சுரேஷ்குமார், கிருஷ்ணமூர்த்தி, மூத்த ஆக்கி வீரர்கள் தனசேகர், புகழேந்தி கலந்து கொண்டனர்

போட்டியில் நடுவர்களாக திருச்செல்வம் காளிதாஸ் மதன் குமார் மாரியப்பன் கௌதம் ஆகியோர் செயல்பட்டனர்
போட்டிக்கான ஏற்பாடுகளை ராஜீவ் காந்தி விளையாட்டு கழக துணைச் செயலாளர்கள் வேல்முருகன், முகேஷ் குமார், ஜெகதீஸ்வரன், அருண்குமார், செய்து இருந்தனர்,







