தூத்துக்குடி மாவட்ட ஆக்கிப்போட்டி: டாக்டர் அம்பேத்கர் அணி ‘சாம்பியன்’
Oplus_16908288
ராஜீவ் காந்தி விளையாட்டு கழகத்தின் 29 வது ஆண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஆண்கள் ஆக்கி போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது. இப் போட்டியில் மொத்தம் 16 அணிகள் கலந்து கொண்டு விளையாடின
இரண்டாவது நாளான நேற்று காலை நடந்த முதலாவது கால் இறுதி ஆட்டத்தில் இலுப்பை யூரணி 11s ஆக்கி கிளப் அணி 2-1 என்ற கோல் கணக்கில் எஸ் எம் பி அணியினரை வெற்றி பெற்றனர்
இரண்டாவது கால் இறுதிப் போட்டியில் ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம் அணி 4-3 என்ற கோல் கணக்கில் தூத்துக்குடி பிரேவ் வாரியர்ஸ் அணியினரை வெற்றி பெற்றனர்

மூன்றாவது கால் இறுதி போட்டியில் தூத்துக்குடி மர்காசி யஸ் ஆக்கி கிளப் அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி யங் சேலஞ்சர்ஸ் அணியினரை வெற்றி பெற்றனர்
நான்காவது கால் இறுதிப் போட்டியில் இலுப்பையூரனி டாக்டர் அம்பேத்கர் ஆக்கி அணி 3-1 என்ற கோல் கணக்கில் கூசாலிபட்டி அசோக் நினைவு ஆக்கி அணியினரை வெற்றி பெற்றனர்
மதியம் 12 30 மணியளவில் நடைபெற்ற முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் கோவில்பட்டி ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம் 2-1 என்ற கோல் கணக்கில் இலுப்பையூரணி 11s ஆக்கி அணியினரை வெற்றி பெற்றனர்
இரண்டாவது அரை இறுதி போட்டியில் டாக்டர் அம்பேத்கர் ஆக்கி அணி 6-2 என்ற கோல் கணக்கில் டாக்டர் அம்பேத்கர் ஆக்கி அணி வெற்றி பெற்றது
மாலை 4 மணி அளவில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கான போட்டியில் நாசரேத் மர்காசியஸ் ஆக்கி கிளப் அணியினரும் இலுப்பையூரணி 11 ஆக்கி அணியினரும் விளையாடிய போட்டியில் கோல் எதுவும் இன்றி சம நிலையில் முடிவு பெற்றதால் டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டு 7-6 என்ற கோல் கணக்கில் நாசரேத் மர்காசியஸ் அணியினர் வெற்றி பெற்று மூன்றாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டனர் தோல்வியடைந்த இலுப்பையூரனி அணியினர் நான்காவது இடத்தை பெற்றனர்.

இறுதிப் போட்டியில் டாக்டர் அம்பேத்கர் ஆக்கி அணியினரும் ராஜீவ் காந்தி விளையாட்டு கழகமும் விளையாடிய போட்டியில் கோல் எதுவுமின்றி சம நிலையில் முடிவு பெற்றதால் டை பிரேக்கர் முறை கடைப்பிடிக்கப்பட்டு டாக்டர் அம்பேத்கர் ஆக்கி அணி 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ‘சாம்பியன்’ பட்டம் வென்றது.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு தேர்வு குழு தலைவர் குருசித்திர சண்முக பாரதி தலைமை தாங்கி வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு கோப்பைகளை வழங்கினார்.
விழாவில் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி பொருளாளர் காளிமுத்து பாண்டிராஜா தொழிலதிபர் உமா சங்கரி, மூத்த ஆக்கி வீரர்கள் புகழேந்தி, மணிவண்ணன், மோகன், உடற் கல்வி ஆசிரியர்கள் முருகன், சுரேஷ்குமார், கிருஷ்ணமூர்த்தி, ஆகியோர் கலந்து கொண்டனர் போட்டியில் நடுவர்களாக காளிதாஸ், மதன் குமார் , மாதவன், சண்முகப்பிரியா, பேபி, ஆகியோர் செயல்பட்டனர்
இப் போட்டிக்கான ஏற்பாடுகளை ராஜீவ் காந்தி விளையாட்டு கழக துணை செயலாளர் வேல்முருகன், முகேஷ் குமார், ஜெகதீஷ் வரன், அருண்குமார், ஆகியோர் செய்திருந்தனர்







