இந்திய கலாச்சார நட்புறவு கழக மாவட்ட குழு கூட்டம்; கோவில்பட்டியில் நடந்தது
Oplus_16908288
இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் மாவட்ட குழு கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது. இந்தியக் கலாச்சார நட்புறவுக் கழகத்தின் மாநில துணைத் தலைவர் அபிராமி முருகன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் ராமலட்சுமி முன்னிலை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் முருகசரஸ்வதி வரவேற்று பேசினார்.
கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து மாநிலச் செயலாளர் க. தமிழரசன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு
*இந்திய கலாச்சார நட்புறவுக் கழகத்தின் உறுப்பினர்கள் சேர்க்கையை அக்டோபர் மாத இறுதிக்குள் முடிப்பது.

*2026 நவம்பர் 3வது வாரத்தில் நட்புறவுக் கழகத்தின் சார்பாக ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் நினைவிடம், கீழடி ஆய்வு மையம், மதுரை காந்தி அருங்காட்சியகத்திற்கு சென்று வருவது.
*அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொடூரமான தடைகளை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கும் கியூபாவிற்கு ஆதரவாக நிதி திரட்டி அனுப்புவது.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற இருக்கும் தென்மண்டல அளவிலான புத்தாக்க பயிற்சி முகாமில், தூத்துக்குடி மாவட்டம் சார்பாக 20 தோழர்கள் பங்கேற்பது என பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது.
கூட்டத்தில் இந்தியக் கலாச்சார நட்புறவுக் கழகத்தின் மாவட்டக் குழு உறுப்பினர்கள் நாஞ்சில் குமார், பாலாஜி பாலகிருஷ்ணன், மகேந்திரன், சங்கர், வழக்கறிஞர் மணிகண்டன், திருக்குறள் ராஜாராம், நல்லய்யா, மேரிஷீலா, மோகன்பாரதி, பழனிச்சாமி,
சாமி ஆகியோர் கலந்துகொண்டனர். மாநில குழு உறுப்பினர் ஜா. ஆம்ஸ்ட்ராங் நன்றி கூறினார்.







