கோவில்பட்டியில் பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றுமதி வாய்ப்புகள் கருத்தரங்கம்; ஆட்சியர் விஷு மகாஜன், நாளை தொடங்கி வைக்கிறார்
Oplus_16908288
கோவில்பட்டி நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரியில் பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றுமதி வாய்ப்புகள் கருத்தரங்கம் நாளை
அக்டோபர் 6 ந் தேதி நடத்தப்படுகிறது. காலை 10 மணிக்கு கருத்தரங்கு தொடக்க நிகழ்ச்சி நடக்கிறது.
“உள்ளூரில் தயாரிப்போம்… உலகிற்கு ஏற்றுமதி செய்வோம்!” என்ற கோஷத்துடன் நடைபெறும் இந்த கருத்தரங்கில் பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பிளாஸ்டிக் தயாரிப்புகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் பற்றி அலசி ஆராயப்படுகிறது.

கருத்தரங்கை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் விஷு மகாஜன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். நேஷனல் என்ஜினியரிங் கல்லூரி இயக்குனர் எஸ்.சண்முகவேல் தொடக்க உரையாற்றுகிறார். கல்லூரி முதல்வர் காளிதாச முருகவேல் வரவேற்று பேசுகிறார்.
கே.ஆர். இன்னோவேஷன் சென்டர் தலைமை நிர்வாக அதிகாரி (CEO)டாக்டர் ஜி. வினோத் முக்கிய உரையாற்றுகிறார். அபிராமி மருத்துவமனை தலைவர் டாக்டர் வசீகரன் சிறப்புரையாற்றுகிறார்.
வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் வெளிநாட்டு வர்த்தக சட்டங்கள் பற்றி கோவை சிவஞானம் சிவ பஞ்சநாதன் விளக்க உரையாற்றுகிறார்.
பிலெக்ஸ் கவுன்சில் மண்டல இயக்குனர் ரூபன் ஹாப்டே நன்றி கூறுகிறார்.

‘
தொடக்க விழா நிகழ்ச்சி முடிந்ததும் தொழில்நுட்ப அரங்கம் நிகழ்ச்சி தொடங்கும். தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அ. ஸ்வர்ணலதா,
‘தொழில்துறைக்கான வர்த்தக எளிதாக்கம் ‘ என்ற தலைப்பில் பேசுகிறார்.
மின்னணு வர்த்தகம் / வால்மார்ட் சந்தை பற்றி ஜெய் பைரவி கம்பெனி இயக்குனர் ஜீவபாரதி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) திட்டங்கள் மற்றும் வாய்ப்புகள் பற்றி உதவி இயக்குனர் ஜி சிமியோன் ஆகியோர் பேசுகிறார்கள்.

தொழில்நுட்ப மேம்பாட்டில் CIPET-இன் பங்கு பற்றி இணை இயக்குனர் எல். சிவசுப்பிரமணியன், ஏற்றுமதி வாய்ப்புகள் மற்றும் ஏற்றுமதி செய்வதில் எளிமை ரூபன் ஹாப்டே,ஏற்றுமதி கடன் உத்தரவாதக் கழகம் பற்றி சுபாஷ் குமார் ஜா, வர்த்தக நிதியுதவியின் நன்மைகள் பற்றி கோவில்பட்டி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் ஜெய காமாட்சி, ஸ்பீடு போஸ்ட் மூலம் ஏற்றுமதி பற்றி கோவில்பட்டி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், கிளியரிங் மற்றும் பார்வேடிங் பற்றி தனியார் ஷிப்பிங் நிறுவன அதிகாரி சுந்தர்ராஜ் ஆகியோர் பேசுகிறார்கள்.
கருத்தரங்கில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) தொழில் முனைவோர் உற்பத்தியாளர்கள், பிளாஸ்டிக் தொழில் நிறுவனங்கள் மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்பு உற்பத்தியாளர்கள், புதிய தொழில் முனைவோர், ஏற்றுமதி / இறக்குமதியில் ஆர்வமுள்ளவர்கள் மாணவர்கள் & இளம் தொழில் முனைவோர் கலந்து கொள்கிறார்கள்.
வி.மோகன்ராஜ், (இயக்குநர் – MMVERDE, கோவில்பட்டி) நிறைவுரை ஆற்றுகிறார்.

-இந்த கருத்தரங்கின் மூலம் ஏற்றுமதி தொழிலை தொடங்குவது எப்படி? வெளிநாட்டு சந்தைகளை அணுகுவது எப்படி? ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் விதிமுறை இணக்கம், இறக்குமதி-ஏற்றுமதி வணிக வாய்ப்புகள் அரசு மற்றும் நிறுவனங்களின் ஆதரவு வாய்ப்புகள், பிளாஸ்டிக் மற்றும் Value-Added Products-ஐ உலக சந்தைக்கு கொண்டு செல்வது எப்படி? என்பன பற்றி அறிந்து கொள்ளமுடியும்.
நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழே உள்ள Google Form-ஐ கட்டாயம் நிரப்பவும்.
🔗 Google Form Registration: https://forms.gle/3NRFhAGwgsz9pdc56







