கோவில்பட்டி போக்குவரத்துக் காவல் பிரிவு வளாகத்தில் நினைவுச் சின்னம் ஒன்று உள்ளது. அந்த வழியாகச் செல்லும்போது அனைவரும் அதைப் பார்க்க முடியும். ஆனால் அந்த நினைவுத்தூண் அமைக்கப்பட்டதற்கான காரணம் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். கோவில்பட்டி அருகே திருவேங்கடம் வட்டம் குருஞ்சாகுளம் கிராமத்தில் 31.12.1980 அன்று நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி, பாதுகாப்புப் பணிக்குச் சென்ற மந்திரம் பிள்ளை என்பவர் படுகொலை செய்யப்பட்டார். மறைந்த காவலர் மந்திரம் பிள்ளையின் நினைவாக, தமிழக […]
இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகள் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்கப்பட்ட நிலையில்.. அந்த ஊராட்சிகளின் உள்ளாட்சி பதவிகள் வரும் 20 தேதி முடிவடைவதால் இந்த ஊராட்சிகளுக்கு தனி அலுவலர் நியமிக்கப்பட்டிருப்பது மட்டுமின்றி அதனை கண்காணிப்பதற்கு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளனர் இது தொடர்பாக கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) இரா.முத்துக்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து முக்கூட்டுமலை, நக்கலமுத்தன்பட்டி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, புளியங்குளம், அப்பனேரி, அய்யனேரி, சித்திரம்பட்டி, பிள்ளையார்நத்தம், வெங்கடாச்சலபுரம், இளையரசனேந்தல் […]
தென் மண்டல காவல்துறையின் மூத்த போலீஸ் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி மதுரை மற்றும் திருநெல்வேலி சரகங்களில் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி சரக மூத்த காவல் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் கடந்த 2 நாட்கள் நடைபெற்றது.திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் இரா. திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய்., தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . […]
கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பில் பெரியார் அறிவுலகம் என்ற பெயரில் நூலகம் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 7 தளங்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. இங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் அறிவியல் மையம் உள்ளது. இந்த நூலகத்தை திறந்து வைப்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் விஜய், சென்னையில் இருந்து இன்று காலை தனி விமானத்தில் புறப்பட்டு கோவை விமானம் நிலையம் வந்தடைந்தார். தொடர்ந்து முதல்-அமைச்சர் விஜய், […]
‘இந்திய விமானப்படைக்கு ஜிசாட்-7சி என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோள் வாங்க ராணுவ அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. ரூ.2 ஆயிரத்து 563 கோடி மதிப்புள்ள இந்த செயற்கைக்கோள் வாங்க பெங்களூருவில் உள்ள நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் ராணுவ அமைச்சகம் நேற்று ஒப்பந்தம் செய்து கொண்டது. முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள், பாதுகாப்பான, தடையற்ற தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த உதவும் என்று ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது. அதுபோல், ‘வருணாஸ்திரா’ என்ற நீர்மூழ்கி கப்பல் தகர்ப்பு […]
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- சென்னையில் மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு 1,000 மின்சாரப் பேருந்துகளை வாங்குவற்காக கோரப்பட்ட ஒப்பந்தப் புள்ளியை கடந்த புதன்கிழமை ரத்து செய்த தமிழ்நாடு அரசு, அதற்கு அடுத்த நாளே ரத்து அறிவிப்பை ரத்து செய்து ஒப்பந்தப்புள்ளி நடைமுறை தொடரும் என்று அறிவித்துள்ளது. அரசு நிர்வாகம் தொடர்பான விஷயங்களில் தமிழக அரசு பெரும் தடுமாற்றத்தில் இருப்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன. மாநகரப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 1,000 மின்சாரப் பேருந்துகளை வாங்குவதற்கான […]
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னையில் வசித்து வரும் மக்கள் விழாக்காலங்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துச் செல்வது வழக்கம். அதன்படி, வருகிற 19-ந் தேதி ஆயுதபூஜை, 20-ந் தேதி விஜயதசமி பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன. இதனால், அரசு ஊழியர்களுக்கு 17-ந் தேதி (நாளை) சனிக்கிழமை முதல் 20-ந் தேதி வரை 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் பெரும்பாலான மக்கள் இன்று தங்கள் ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டிருப்பார்கள். இதைக் கருத்தில் கொண்டு விமானங்களில் கட்டணம் பன்மடங்கு […]
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 திரைப்படம் இன்று வெளியானது. இந்த படம் வெற்றி பெற வேண்டியும், உலக மக்கள் அனைவரும் நோய்நொடியின்றி நலமாக வாழ வேண்டியும் கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவிலில் கோவில்பட்டி ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் அங்கப்பிரதட்சணம் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ரஜினி ரசிகர் மன்ற நகரப் பொறுப்பாளர் ஜெயக்கொடி தலைமை தாங்கினார், நகரச் செயலாளர் மகேஷ் பாலா, இணைச் செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரஜினி ரசிகர்கள் பலர் […]
சென்னை அம்பத்தூரில் சிங்கப்பூரைச் சேர்ந்த கேபிட்டல் லேண்ட் நிறுவனம் 46 மெகாவாட் திறன் கொண்ட பிரமாண்ட தரவு மையத்தை அமைத்துள்ளது. இந்த தரவு மையம் சுமார் 4,900 சர்வர் ரேக்குகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த தரவு மையத்தை தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் சிங்கப்பூர் துணை பிரதமர் கான் கிம் யோங் ஆகியோர் இணைந்து இன்று காலை திறந்து வைத்தனர். இந்த நிகழ்வின்போது, முதல்வர் விஜய் – சிங்கப்பூர் துணை பிரதமர் கான் கிம் யாங் […]
சட்டமன்ற அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் அதன் பிறகு மாண்புமிகு அம்மா அவர்களால் எகு கோட்டையாக மாற்றப்பட்ட இயக்கம். அந்த இருபெரும் தலைவருடைய மறைவிற்குப் பின்னால், இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்திந்திய அதிமுக கட்டுக்கோப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த இயக்கத்திலே எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. ஒரு சிலர் தங்களுடைய கருத்துக்களை பொதுச் செயலாளருடைய கவனத்திற்கு […]







