தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகளவில் உள்ளது. வெயில் மற்றும் மழை என காலநிலை மாற்றத்தால், டெங்குவை பரப்பும், ‘ஏடிஸ்’ வகை கொசுக்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக, மாநிலம் முழுவதும் பரவலாக டெங்கு பாதிப்பு உள்ளது. குறிப்பாக தினசரி, 70 முதல் 100 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக […]
சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப்பிறகு மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. முன்னாள் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான அணி மற்றும் ரிதப்ரதா பானர்ஜி தலைமையிலான அணிகளும் தங்கள் தரப்பே உண்மையான திரிணாமூல் கட்சி என்று கூறி வருகின்றன. இதையடுத்து இரு அணிகளின் கோரிக்கைகளையும் பரிசீலிக்கும் வரை பெயர் மற்றும் சின்னத்தை முடக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. மேற்கு வங்காளத்தின் நந்திகிராம் மற்றும் ரேஜினகர் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. […]
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்திற்காக பல மாதங்களாக திருப்பணிகள் ரூ.25 கோடி மதிப்பில் நடந்தன.தீ விபத்தில் சேதம் அடைந்த வீரவசந்தராயர் மண்டபம் சீரமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. யாகசாலை பூஜைக்காக வடக்கு ஆடி வீதியில் 184 குண்டங்க ளுடன் பிரமாண்ட யாகசாலை அமைக்கப்பட்டது. மூலவர் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரருக்காக பிரத்யேக தங்க குடங்கள் யாக சாலையில் வைக்கப்பட்டன. கங்கை, யமுனை, 1 காவிரி, வைகை உள்ளிட்ட பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரை கலசங்களில் […]
தமிழ்நாடு அரசு சூழலியல் துறை மற்றும் வனத்துறை இணைந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மலையேற்ற பயிற்சியை நடத்தின. நீலகிரி மாவட்டத்தில் இரண்டாவது மிக உயரமான மலை சிகரம் அவலாஞ்சி பகுதியில் உள்ள கொலரி பெட்டா ஆகும். இந்த மலை சிகரம் கடல் மட்டத்திலிருந்து 8629 அடிகள் உயரத்தில் உள்ளது. இந்த மலையேற்றத்திற்கு தமிழகம் மற்றும் கேரளம் மாநிலத்திலிருந்து 12 நபர்கள் பல்வேறு கட்ட போட்டி, சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு சுற்று சூழலியல் விழிப்புணர்வு மலையற்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் கோவில்பட்டியை […]
தூத்துக்குடியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்கள் குறைகளை கூட்டத்தில் தெரிவித்தனர். மேலும் 151 விவசாயிகள், மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்கள். அந்த மனுக்களில் கூறப்பட்டிருந்த கோரிக்கைகள் விவரம் வருமாறு::- *சாத்தான்குளம் பன்னம்பாறை விளக்கு – கக்கன் நகர் மழைநீர் செல்லும் ஓடை ஆக்கிரமிப்பினை அகற்ற வேண்டும். *சுடலையாண்டவர் திருக்கோவில் அருகில் நீர்தேக்கம் அமைத்திட ஏற்படும் காலதாமதத்தை தடுத்து விரைந்து திட்டங்களை […]
தந்தை பெரியார் 148-வது பிறந்த நாள் விழா, சமூக நீதி நாளாக இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை, அண்ணா சாலை, அரசு பன்னோக்கு மருத்துவமனை அருகில் உள்ள பெரியார் சிலைக்கு, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், அமைச்சர்கள் ஆனந்த், ராஜ்மோகன், மரிய வில்சன், வெங்கடரமணன், ஆதவ் அர்ஜுனா, வன்னியரசு, குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது சிலைக்கு,தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் டி.ஆர்.பாலு, […]
தமிழகத்தின் சமூக சீர்திருத்தவாதி, சாதி ஒழிப்பு, பெண் விடுதலை ஆகியவற்றிற்காக போராடிய தந்தை பெரியார் 148 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டியில் பெரியார் முழு உருவ சிலைக்கு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்விற்கு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க. தமிழரசன் தலைமை தாங்கினார். இந்திய கலாச்சார நட்புறவக் கழகத்தின் மாநில துணைத்தலைவர் அபிராமி பி.முருகன் மாலை அணிவித்தார். நிகழ்வில் திராவிட கழகம் செண்பகராஜ், […]
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. காலை, 7:40 மணிக்கு அம்மன், சுவாமி தங்க விமானங்கள், ராஜகோபுரங்களுக்கும், காலை, 7:55 மணிக்கு அம்மன் சன்னிதிக்கும், காலை, 8:10 மணிக்கு சுவாமி சன்னிதிக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. இன்று அதிகாலை, 5 மணி முதல், 6மணிக்குள் இதர தெய்வ சன்னிதிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. மதுரை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் 6,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாளை கும்பாபிஷேகம் […]
கோவில்பட்டி காே. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் 1998-2001ஆம் ஆண்டு தாவரவியல் துறையில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றிணைந்து, தங்களது “வெள்ளிவிழா சந்திப்பு” நிகழ்ச்சியை நடத்தினர். நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் தங்களுக்குக் கல்வியளித்த பேராசிரியர்களை மீண்டும் சந்தித்து, கல்லூரி காலத்தின் இனிய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். ஆசிரியர் – மாணவர் உறவையும், நண்பர்களுக்கிடையேயான பாசத்தையும் நினைவுகூரும் வகையில் இந்நிகழ்ச்சி நெகிழ்ச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பேராசிரியர் உமாதேவி தலைமை தாங்கினார். முன்னாள் […]
ஆளுங்கட்சியை விமர்சித்ததால் என்னுடைய வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை; முன்னாள் அமைச்சர்
கடந்த திமுக அரசில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து சென்னை மற்றும் திருச்சி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள விஸ்ராந்தி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவரது இல்லத்தில் சோதனை நடந்தது. சோதனை முடிவில், செய்தியாளர்களை சந்தித்த அன்பின் மகேஷ் கூறியதாவது:- “காலை முதல் சுமார் 8 மணி நேரமாக எனது […]







