தூத்துக்குடியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் : 151 மனுக்கள் குவிந்தன
தூத்துக்குடியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்கள் குறைகளை கூட்டத்தில் தெரிவித்தனர். மேலும் 151 விவசாயிகள், மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்கள். அந்த மனுக்களில் கூறப்பட்டிருந்த கோரிக்கைகள் விவரம் வருமாறு::-
*சாத்தான்குளம் பன்னம்பாறை விளக்கு – கக்கன் நகர் மழைநீர் செல்லும் ஓடை ஆக்கிரமிப்பினை அகற்ற வேண்டும்.
*சுடலையாண்டவர் திருக்கோவில் அருகில் நீர்தேக்கம் அமைத்திட ஏற்படும் காலதாமதத்தை தடுத்து விரைந்து திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

* நாலயிரமுடையார் குளத்தில் மீன்பிடிப்பு உரிமையை சங்கத்திற்கு வழங்குவதுடன், நாலயிரமுடையார் குளத்திலிருந்து மறுகால் வாய்க்கால் மற்றும் திருவைக்குளம் குட்டை வடிகால்களை தூர்வார வேண்டும்.
* 2025 -26 ம் ஆண்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும்.
* பெட்டைக்குளம், செம்மறிப்புதுக்குளம், நகளை குளம், நொச்சிகுளம், சம்பருத்தாகுளம், குருந்தகுளம், சடையநேறிகுளம் ஆகிய குளங்களை தூர்வார வேண்டும்.
* சடையநேறி கால்வாயை நிரந்தர கால்வாயாக மாற்றி தருவதுடன்,கருமேனியாற்றை கரியாண்டில் மறித்து அணைக்கட்டி தண்ணீரை தேக்கி விகிதாச்சார அடிப்படையில் பிரித்து கொடுக்க வேண்டும்
* கருமேனியாற்றில் சுப்பிரியார்புரம் ஓடை தடுப்பணை சரிசெய்ய வேண்டும்.
மேற்கண்டவை உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு இருத்தன.

கோரிக்கையினை உடனடியாக பரீசிலனை செய்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் இளையராஜா, உதவி ஆட்சியர் (பயிற்சி)பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், இணை இயக்குநர் (வேளாண்மை) கிருஷ்ணகுமார், செயற்பொறியாளர், ஆறு வடிநிலக் கோட்டம் தங்கராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மனோரஞ்சிதம், அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.







