கோவில்பட்டியில் கல்லூரி மாணவர்கள் ரத்ததானம்
Oplus_16908288

கோவில்பட்டி எஸ் எஸ் டி எம் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் ஜே சி ஐ அமைப்பு சார்பில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. கல்லூரி செயலாளர் கண்ணன் ஏற்பாட்டின் பேரில் கல்லூரி கரையரங்கத்தில் இந்த முகாம் நடந்தது.
ரத்த தானம் செய்ய 70 மாணவர்கள் விருப்பப்பட்டு பெயர் கொடுத்திருந்தனர். கோவில்பட்டி அரசு மருத்துவமனை ரத்ததானம் வங்கியில் இருந்து மருத்துவ குழுவினர் 15 க்கும் மேற்பட்டோர் கல்லூரிக்கு வந்து ரத்தம் சேகரித்தனர்.

முகாமில் பங்கேற்ற மாணவர்களின் ரத்தம் பரிசோதனை செய்யப்பட்டு, ரத்த அழுத்தம் சீராக இருக்கிறதா என்ற பரிசோதனையும் நடந்தது. குறிப்பிட்ட மாணவர் ரத்த தானம் செய்ய தகுதியானவரா என்ற பரிசோதனைக்கு பிறகே அவர்களிடமிருந்து ரத்தம் சேகரிக்கப்பட்டது.
மொத்தம் 30 மாணவர்கள் ரத்த தானம் செய்தனர். அவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட ரத்தம் பாதுகாப்பாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
ரத்ததான முகாமுக்கு கல்லூரி முதல்வர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். ஜே. சி. ஐ. தலைவர் ரகுபதி, செயலாளர் செல்வ லட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்







