கி.ராஜநாராயணன் சிலைக்கு ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை
கரிசல் இலக்கியத்தின் ‘முன்னத்தி ஏர்’ என்று அழைக்கப்படும் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணன் 104-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் உள்ள கி.ரா. நினைவரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது முழு உருவ வெண்கல சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், சார் ஆட்சியர் ஹிமான்ஷு மங்கள் மற்றும் கரிசல் எழுத்தாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கி.ரா. சிலைக்கு மாலை அணிவித்தனர்







