பெரியார் 148-வது பிறந்த நாள்: சிலைக்கு அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை
Oplus_16908288

தந்தை பெரியார் 148-வது பிறந்த நாள் விழா, சமூக நீதி நாளாக இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில்
சென்னை, அண்ணா சாலை, அரசு பன்னோக்கு மருத்துவமனை அருகில் உள்ள பெரியார் சிலைக்கு, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்,
அமைச்சர்கள் ஆனந்த், ராஜ்மோகன், மரிய வில்சன், வெங்கடரமணன், ஆதவ் அர்ஜுனா, வன்னியரசு, குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது சிலைக்கு,தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் டி.ஆர்.பாலு, பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
எம்.பி.க்கள் கலாநிதி வீராசாமி, கிரிராஜன், மேயர் பிரியா, முன்னாள் அமைச்சர்கள் பி.கே.சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், வர்த்தக அணி செயலாளர் காசி முத்து மாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு, பிரவீன் சக்கரவர்த்தி எம்.பி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பொதுச்செயலாளர் சிரஞ்சீவி,மாவட்ட தலைவர் கராத்தே ஆர்.செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.
சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலைக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்,மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
சென்னை எழும்பூர் தாயகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிர்வாகிகள்சைதை ப.சுப்பிரமணி எம்.சி., டி.சி.இராஜேந்திரன், ஆவடி இரா.அந்திரிதாஸ், மல்லிகா தயாளன், மாவை மகேந்திரன், தென்றல் நிசார், காயல் இ.கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.







