148 வது பிறந்த நாள்: கோவில்பட்டியில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
தமிழகத்தின் சமூக சீர்திருத்தவாதி, சாதி ஒழிப்பு, பெண் விடுதலை ஆகியவற்றிற்காக போராடிய தந்தை பெரியார் 148 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.
பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டியில் பெரியார் முழு உருவ சிலைக்கு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்விற்கு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க. தமிழரசன் தலைமை தாங்கினார். இந்திய கலாச்சார நட்புறவக் கழகத்தின் மாநில துணைத்தலைவர் அபிராமி பி.முருகன் மாலை அணிவித்தார். நிகழ்வில் திராவிட கழகம் செண்பகராஜ், மக்கள் நீதி மய்யம் கல்லூரணி ராதா கிருஷ்ணன், ஞானம்,இந்திய தேசிய காங்கிரஸ் l துரைராஜ், பழனிச்சாமி, தியாகி விஸ்வநாத தாஸ் பேரவை சங்கர், பகத்சிங் ரத்ததான கழகம் மா .காளிதாஸ், டாக்டர் சுதாகர், தொழில அதிபர் வசந்தகுமார்,ஆசிரியர்கள் மோகன்ராஜ்,மகேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
போலீசில் புகார்
பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி பாண்டவர்மங்கலத்தில் அமைந்திருக்கும் அன்னாரது உருவ சிலைக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த வருடம் பெரியார் சிலைக்கு பின்புறம் தமிழக வெற்றி கழகத்தினர் தங்களது தட்டி போர்டை வைத்து அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளதாகவும் அதை அகற்றக்கோரியும் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க தமிழரசன் தலைமையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. முன்னதாக இதனை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.







