8629 அடி உயர மலையேற்ற பயிற்சியில் கோவில்பட்டி வீரர் பங்கேற்பு
Oplus_16908288
தமிழ்நாடு அரசு சூழலியல் துறை மற்றும் வனத்துறை இணைந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மலையேற்ற பயிற்சியை நடத்தின.
நீலகிரி மாவட்டத்தில் இரண்டாவது மிக உயரமான மலை சிகரம் அவலாஞ்சி பகுதியில் உள்ள கொலரி பெட்டா ஆகும். இந்த மலை சிகரம் கடல் மட்டத்திலிருந்து 8629 அடிகள் உயரத்தில் உள்ளது.
இந்த மலையேற்றத்திற்கு தமிழகம் மற்றும் கேரளம் மாநிலத்திலிருந்து 12 நபர்கள் பல்வேறு கட்ட போட்டி, சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு சுற்று சூழலியல் விழிப்புணர்வு மலையற்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் கோவில்பட்டியை சேர்ந்த நாட்டு நலப்பணி திட்ட முன்னாள் அலுவலர் சுப்பா ராஜூ கலந்து கொண்டார்.

மலையேற்ற பயிற்சிக்குப் பிறகு வனத்துறை கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மலையேற்ற சாதனையில் கலந்து கொண்டவர்களுக்கு சாதனையாளர் சான்றிதழை முதன்மை வனப் பாதுகாவலர் வழங்கி பாராட்டினார்.







