ஆளுங்கட்சியை விமர்சித்ததால் என்னுடைய வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை; முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ்
கடந்த திமுக அரசில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து சென்னை மற்றும் திருச்சி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்து வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள விஸ்ராந்தி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவரது இல்லத்தில் சோதனை நடந்தது.

சோதனை முடிவில், செய்தியாளர்களை சந்தித்த அன்பின் மகேஷ் கூறியதாவது:-
“காலை முதல் சுமார் 8 மணி நேரமாக எனது வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். எனது அனைத்து கோப்புகள் மற்றும் வீட்டின் அனைத்து அறைகளிலும் சோதனை நடத்த போலீசாருக்கு அனுமதி அளித்தேன்.
ஆளுங்கட்சியை விமர்சித்ததன் காரணமாகவே எனது வீட்டில் சோதனை நடைபெற்றுள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காகவும், அரசியல் மடைமாற்றத்திற்காகவும் எனது வீட்டில் சோதனை நடைபெற்றுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.







