கோவில்பட்டி கல்லூரி முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி
கோவில்பட்டி காே. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் 1998-2001ஆம் ஆண்டு தாவரவியல் துறையில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றிணைந்து, தங்களது “வெள்ளிவிழா சந்திப்பு” நிகழ்ச்சியை நடத்தினர்.
நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் தங்களுக்குக் கல்வியளித்த பேராசிரியர்களை மீண்டும் சந்தித்து, கல்லூரி காலத்தின் இனிய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
ஆசிரியர் – மாணவர் உறவையும், நண்பர்களுக்கிடையேயான பாசத்தையும் நினைவுகூரும் வகையில் இந்நிகழ்ச்சி நெகிழ்ச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பேராசிரியர் உமாதேவி தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர் சங்க செயலாளர் கவிதா மஞ்சு முன்னிலை வகித்தார். தாவரவியல் துறைத் தலைவர் பேராசிரியர் மகேஷ்குமார் சிறப்புரையாற்றினார்.
விழாவில் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் அருள்கிருஷ்ணமூர்த்தி, ஜ.எஸ். கிருஷ்ணசாமி, லூயிஸ் ராஜ், ராம்தாஸ், கிருஷ்ண குமார், கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஆதிலட்சுமி, சுகந்தி ஞானம்மாள் ஆகியோர் கலந்து கொண்டு முன்னாள் மாணவர்களை வாழ்த்தினர்.
நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, 1998-2001 தாவரவியல் துறை முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து தங்களது துறைக்கு நினைவுப் பரிசாக புதிய கணினி ஒன்றை வழங்கினர். மேலும், முன்னாள் மாணவர்கள் அனைவரும் இணைந்து கல்லூரியின் கல்வி மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்காக ஒரு தொகையை நிதியுதவியாக வழங்கினர்.
முன்னாள் மாணவரும் பேராசிரியருமான கமல் ராஜ் வரவேற்று பேசினார்.நிகழ்ச்சிகளை கீதா மஞ்சு மற்றும் அழகம்மாள் ஆகியோர் தொகுத்து வழங்கினார். முன்னாள் மாணவி ரஜீதா நன்றி கூறினார்.







