பல் பாதுகாப்பு மருத்துவ முகாம்
கோவில்பட்டி ரோட்டரி சங்கம் மற்றும் வசந்த் பல் மருத்துவமனை சார்பில் கோவில்பட்டி கரிதா பப்ளிக் பள்ளியில் பல் பாதுகாப்பு மருத்துவ முகாம் நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் முத்து முருகன் தலைமை தாங்கினார்.
ரோட்டரி சங்க செயலாளர் ரமேஷ் குமார், கரிதா பப்ளிக் பள்ளி தாளாளர் காசிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பல் பாதுகாப்பு மருத்துவ முகாமை ரோட்டரி மாவட்ட முன்னாள் உதவி ஆளுநர் முத்து செல்வம் தொடக்கி வைத்தார்.
பல் மருத்துவர் சுதாகர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு
ஏ.ஜ டெக்னாலஜி ஸ்கேன் மிஷின் மூலம், மாணவர்களின் வாய்ப் பகுதியினை ஸ்கேன் செய்து பல் மருத்துவம் குறித்து மருத்துவ ஆலோசனை வழங்கினார்.
ரோட்டரி சங்க நிர்வாகிகள் மாரியப்பன் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்







