கோவில்பட்டியில் விஸ்வப்பிரம்ம ஜெயந்தி, ஆராதனை விழா

கோவில்பட்டியில் விஸ்வகர்ம மகாஜன சங்கம், விஸ்வகர்ம தொழிலாளர் சங்கம், விஸ்வகர்ம நகை தொழிலாளர்கள் சங்கம், விஸ்வகர்ம ஜெயந்தி நல அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய விஸ்வப்பிரம்ம ஜெயந்தி, ஆராதனை விழாவை நடத்தின.
விஸ்வகர்ம மகாஜன சங்கத் தலைவர் பால முருகேசன், விஸ்வகர்ம நகை தொழிலாளர் சங்க தலைவர் கணேசன், விஸ்வகர்ம ஜெயந்தி நல அமைப்பு தலைவர் முத்துவேல் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

முன்னாள் மகாஜன சங்கத் தலைவர்கள் ராஜமாணிக்கம், பால்ச்சாமி,கைத்தறி மற்றும் துளிநூல் துறை ஓய்வு பெற்ற கூடுதல் இயக்குனர் சாரதி சுப்புராஜ், நகை தொழிலாளர் சங்க முன்னாள் துணைச் செயலர் சோமசுந்தரம், விஸ்வகர்ம ஜெயந்தி நல அமைப்பு கவுரவ தலைவர்கள் கண்ணன், முருகன், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஐந்தொழிலாளர்கள் தொழிலை சித்தரிக்கும் வகையில் ஊர்வலம் மற்றும் விஸ்வகர்ம பகவான் ரத யாத்திரையை முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி கொடியசைத்து தொடக்கி வைத்தார். கோவில்பட்டி காந்தி மைதானத்தில் தொடங்கிய ரத யாத்திரை நகரின் முக்கிய வீதிகள் வழியாக விஸ்வகர்மா உயர்நிலைப்பள்ளி முன்பு நிறைவடைந்தது. முன்னதாக விஸ்வகர்மாவுக்கு சிறப்பு ஆராதனை பூஜை நடைபெற்றது.
விஸ்வகர்ம ஜெயந்தி நல அமைப்பு செயலாளர் கருப்பசாமி வரவேற்றார். விஸ்வகர்ம மகாஜன சங்க பொருளாளர் முருகேஷ் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை, விஸ்வகர்ம ஜெயந்தி நல அமைப்பினர் செய்திருந்தனர்.







