கோவில்பட்டி சீனிவாச நகர் முதல் தெருவில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று மாலை 7 மணியளவில் செல்வ விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அய்யனேரி குழுவினரின் பஜனை நடைபெற்றது.இரவு 9 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியாளர்கள் எஸ்.சுரேஷ்குமார் , டி.வெங்கடேஷ் , எஸ்.சுரேஷ்குமார், பி.புருஷோத்தம்ன் ஆகியோர் செய்திருந்தனர்.
கோவில்பட்டி எஸ் எஸ் டி எம் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் ஜே சி ஐ அமைப்பு சார்பில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. கல்லூரி செயலாளர் கண்ணன் ஏற்பாட்டின் பேரில் கல்லூரி கரையரங்கத்தில் இந்த முகாம் நடந்தது. ரத்த தானம் செய்ய 70 மாணவர்கள் விருப்பப்பட்டு பெயர் கொடுத்திருந்தனர். கோவில்பட்டி அரசு மருத்துவமனை ரத்ததானம் வங்கியில் இருந்து மருத்துவ குழுவினர் 15 க்கும் மேற்பட்டோர் கல்லூரிக்கு வந்து ரத்தம் சேகரித்தனர். முகாமில் பங்கேற்ற மாணவர்களின் ரத்தம் […]
கரிசல் இலக்கியத்தின் ‘முன்னத்தி ஏர்’ என்று அழைக்கப்படும் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணன் 104-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் உள்ள கி.ரா. நினைவரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது முழு உருவ வெண்கல சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், சார் ஆட்சியர் ஹிமான்ஷு மங்கள் மற்றும் கரிசல் எழுத்தாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கி.ரா. […]
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது. த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க.. நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்து வரும் கம்யூனிஸ்டு கட்சிகள் இணைந்து இடைத்தேர்தலில் தனியாக போட்டியிடுகின்றன. மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் போட்டியிடுகிறது. சென்னை தியாகராயநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி […]
மீனவர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கிவிட்டு தலைமை செயலக புதிய கட்டிடம் தேவையா? முன்னாள் அமைச்சர்
அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. இந்த உலகம் உள்ளவரை அதிமுகவை யாராலும் அசைக்கவோ, அழிக்கவோ முடியாது. அண்ணா காட்டிய வழியில் மக்கள் ஆதரவோடு அதிமுக என்றும் நிலைத்து நிற்கும். சென்னை பட்டினம்பாக்கத்தில் ரூ.1,200 கோடி செலவில் புதியதலைமைச்செயலகம் கட்டும் அரசின் திட்டத்திற்கு எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன், மீனவர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கிவிட்டு இந்தப் புதிய கட்டிடம் தேவையா? லூப் சாலை மற்றும் சாந் […]
லண்டனில் முதல் – அமைச்சர் விஜய் முன்னிலையில் ரூ.15,300 கோடி முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில், தமிழ்நாட்டில் உற்பத்தி ஆலைகள், உலகளாவிய திறன் மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகளை நிறுவி விரிவுபடுத்துவதற்காக, தமிழ்நாடு அரசுக்கும் முன்னணி உலகளாவிய நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ரூ.15,300 கோடிக்கும் அதிகமான முதலீட்டு முன்மொழிவுகள் மற்றும் உறுதிமொழிகள் மூலம் மாநிலத்தில் 10,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது. இம்முறை சட்டப் பேரவையை மையமாகக் கொண்டு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதற்காக ஜனநாயக அறை ஒன்றும் திறக்கப்பட்டுள்ளது. அதில் ஆளும் அணி ஒரு பிரிவாகவும், எதிர் அணி மற்றொரு பிரிவாகவும் செயல்படுகிறது. ஆளும் அணியினர் செய்யும் தவறுகளை எதிர் அணியினர் சுட்டிக்காட்ட வேண்டும். போட்டியின் சுவாரசியத்தைக் கூட்டும் வகையில் நிகழ்ச்சி இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் போட்டியாளர்களுடன் நிகழச்சியை […]
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் ரீல்ஸ் அரசியல் மோகத்தில் இருந்து தமிழகத்தை விடுவித்து, அண்ணா ஆட்சியை மீண்டும் நிறுவிட இந்நாளில் உறுதியேற்போம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- தமிழக மக்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் தன்மான உணர்வை விதைத்து, சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மாநில உரிமைகள் என திராவிட இயக்கத்தின் கொள்கைகளை மக்கள் இயக்கமாக வளர்த்தெடுத்த ஒப்பற்ற தலைவர் […]
தேசிய முற்போக்கு திராவிட கழகம் 22ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கோவில்பட்டி மேற்கு ஒன்றியம் விஜயாபுரியில் மாவட்ட தொழிற்சங்க பொருளாளர் விஜயாபுரி மணிகண்டண் தலைமையில் ஒன்றிய பொறுப்பாளர் முருகன் முன்னிலையில் கழக தலைவர் விஜயகாந்த் உருவப் படத்திற்க்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. வடக்கு மாவட்ட தேமுதிக செயலாளர் சுரேஷ் கழக கொடி ஏற்றி வைத்து, இனிப்பு வழங்கி பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கினார். செயற்குழு உறுப்பினர் பிரபாகரன்,பொதுக்குழு உறுப்பினர் காளிதாஸ், நகர செயலாளர் நேதாஜி […]
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று கோவில்பட்டி மற்றும் மாவட்டம் முழுவதிலும் உள்ளஉள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் பால்குடம் ஊர்வலம், அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவில்பட்டி ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோயிலில் பால்குட ஊர்வலம் நடந்தது. 108 பால்குட ஊர்வலம் கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு கதிர்வேல் நகரில் உள்ள சக்தி விநாயகர் கோவில் 11ஆம் ஆண்டு […]







