தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பு கண்காணிப்பாளர் அலுவலக செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேடநத்தம் கிராமத்தில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட முனியசாமி என்பவரின் மகன் தர்மமுனீஸ்வரன் என்ற “மாவீரன்” (38 )என்பவருக்கு இன்று (25.05.2026) தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.I இச்சம்பவம் தொடர்பாக, குளத்தூர் காவல் நிலையத்தில் குற்ற எண் 118/26-ன் கீழ், “பெண் காணவில்லை” என்ற பிரிவின் […]
66 பேருக்கு பத்ம விருதுகளை வழங்கி ஜனாதிபத திரவுபதி முர்மு கவுரவித்தார்.கலை, சமூகசேவை, பொதுப்பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தலைசிறந்த பங்களிப்பை அளித்தவர்களுக்கு நாட்டின் உயரிய பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. நடப்பாண்டில் இந்த விருதுக்கு தேர்வானோரின் விவரங்கள் ஜன.26ம் தேதி அறிவிக்கப்பட்டது. 5 பேருக்கு பத்ம விபூஷண், 13 பேருக்கு பத்ம பூஷண், 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் என மொத்தம் 131 பேருக்கு அறிவிக்கப்பட்டது. இதில் 66 […]
மந்தித்தோப்பு சாலையை விரிவாக்கம் செய்யவேண்டும்; கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு வலியுறுத்தல்
கோவில்பட்டி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம், கூட்டமைப்பின் செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்கிளின் தலைமையில் கூட்டமைப்பு அலுவலகத்தில் நடைபெற்றது. அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் புதிய நிர்வாகிகள் சம்பந்தமாக ஆலோசனைகள் குறித்து கூட்டமைப்பின் தலைவர் க தமிழரசன் உரையாற்றினார். தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- *கோவில்பட்டி நீதிமன்ற வளாகத்தில் ,பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுவதும் ,தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து சென்றாலும் சாலை உட்பட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாதது சரி செய்யப்பட வேண்டும் […]
கடுங்குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக முதல்-அமைச்சர் விஜய் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர், காவல் உயர் அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்றனர். இந்நிலையில், கடுங்குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்,கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையில் இன்று (25.05.2026) தலைமைச் செயலகத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், வழக்கினை […]
உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு 100 ரூபாய் கட்டணத் தரிசன டிக்கெட் விநியோகத்தில் உள்கட்டமைப்பு ரீதியாகப் பெரும் முறைகேடு நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பக்தர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு நூதன முறையில் கணினியில் போலியாகத் தயாரிக்கப்பட்ட தரிசன டிக்கெட்டுகளை வழங்கி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பது கோவில் தணிக்கையில் அம்பலமானது. இவ்விவகாரம் தொடர்பாக கோவிலில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வந்த மேனகா என்ற பெண் ஊழியர் முதற்கட்டமாகப் […]
தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு பெண் ஆஜராகி தான் பாலியல் வந்மொடுமை செய்யப்பட்டதாக புகார் அளித்தார். அந்த புகாரில “எனது சமூகத்தைச் சேர்ந்த தெரிந்த நபரான பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்த மோகித் என்பவர் அவரது இரு நண்பர்களுடன் சேர்ந்து எனது விருப்பத்திற்கு மாறாக என்னை அழைத்துச் சென்று மீன்பிடி துறைமுகம் அருகே பாலியல் வன்கொடுமை செய்ததாக” தெரிவித்தார். மேலும் தன்னிடம் இருந்த ரூ 2,500/- ரொக்கம், ஒரு கைப்பேசி மற்றும் இரண்டு வெள்ளி […]
ராஜீவ் காந்தி விளையாட்டுக் கழக இளம் வீரர்களுக்கு ஒரு நாள் ஆக்கி பயிற்சி முகாம் கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முன்னாள் இந்திய ஆக்கி வீரரும் இந்தியன் வங்கி ஆக்கி அணியின் பயிற்றுனரும் சென்னை இந்திரா காந்தி ஆக்கி அணி மற்றும் திருமால்வளவன் ஆக்கி அகடமி அணியின் நிறுவனருமான திருமால்வளவன் இளம் வீரர்களுக்கு பயிற்சி அளித்தார். இளம் வீரர்களுக்கு ஆக்கி விளையாட்டின் நுணுக்கங்கள் மற்றும் விளையாடுவதினால் பெரும் நன்மைகள் பற்றி […]
கோவில்பட்டி புத்துயிர் இரத்ததானக் கழகம் ,மக்கள் நலம் அறக்கட்டளை, கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பாக கோவில்பட்டி ஆயிர வைசிய துவக்கப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு புத்துயிர் ரத்ததான கழக செயலாளர் க தமிழரசன் தலைமை தாங்கினார் .முகாமில் கலந்து கொண்ட 38 பேருக்கு மருத்துவர் தரணி கண் பரிசோதனை செய்தார். 8 பேர் மேல் சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். முகாமில் […]
தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகரும், அமைச்சருமான ‘தினத்தந்தி’ நிறுவனர் தமிழர் தந்தை சி. பா ஆதித்தனார் 45-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கோவில்பட்டி கடலையூர் ரோட்டில் உள்ள அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு இளந்தமிழர் கலை இலக்கிய பேரவை சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. பேரவை ஒருங்கிணைப்பாளர் நாஞ்சில் குமார் தலைமை தாங்கினார். பேரவை தலைவர் விக்னேஷ் முன்னிலை வகித்தார். கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் ஆர். […]
பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு எஸ்.எஸ்.டி.எம்.கல்லூரி சார்பில்
கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் (எஸ்.எஸ்.டி.எம./.) கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளி அளவில் அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ1000 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசாக வல்ன்க்கப்பட்டன, மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கவும், நல்ல புத்தகங்களை தேர்வு செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற […]







