மந்தித்தோப்பு சாலையை விரிவாக்கம் செய்யவேண்டும்; கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு வலியுறுத்தல்
கோவில்பட்டி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம், கூட்டமைப்பின் செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்கிளின் தலைமையில் கூட்டமைப்பு அலுவலகத்தில் நடைபெற்றது.

அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் புதிய நிர்வாகிகள் சம்பந்தமாக ஆலோசனைகள் குறித்து கூட்டமைப்பின் தலைவர் க தமிழரசன் உரையாற்றினார்.
தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
*கோவில்பட்டி நீதிமன்ற வளாகத்தில் ,பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுவதும் ,தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து சென்றாலும் சாலை உட்பட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாதது சரி செய்யப்பட வேண்டும்
* கோவில்பட்டி மந்திதோப்பு சாலையை விரிவாக்கம் செய்திட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* கோவில்பட்டி பசும்பொன் உ. முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தையினை செயல்படுத்தி நகராட்சிக்கு ஏற்படும் வருவாய் இழப்பை சரி செய்ய வேண்டும்.
* திட்டங்குளம் பெருந்தலைவர் காமராஜர் சந்தை அருகில் விபத்தினை தடுத்திட, போக்குவரத்தை சீர்படுத்திட ரவுண்டானா அமைக்க வேண்டும்.

* சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையிலும், போக்குவரத்து மற்றும் பாதசாரிகள் எந்தவித பாதிப்பும் இல்லாமலும் சாலையோர வியாபாரத்தை முறைப்படுத்த வேண்டும்.
* எப்பொழுதும் இல்லாத வகையில் தெரு நாய்களின் தொல்லைகள் அதிகமாக மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.







