• October 22, 2026

திருச்செந்தூர் கோவிலில் விஐபி தரிசனம் டிக்கெட் மோசடி: சிபிஐ விசாரிக்க கோரி இந்து முன்னணி போராட்டம்

 திருச்செந்தூர் கோவிலில் விஐபி தரிசனம் டிக்கெட் மோசடி: சிபிஐ விசாரிக்க கோரி இந்து முன்னணி போராட்டம்

உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு 100 ரூபாய் கட்டணத் தரிசன டிக்கெட் விநியோகத்தில் உள்கட்டமைப்பு ரீதியாகப் பெரும் முறைகேடு நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பக்தர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு நூதன முறையில் கணினியில் போலியாகத் தயாரிக்கப்பட்ட தரிசன டிக்கெட்டுகளை வழங்கி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பது கோவில்  தணிக்கையில் அம்பலமானது.

இவ்விவகாரம் தொடர்பாக கோவிலில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வந்த மேனகா என்ற பெண் ஊழியர் முதற்கட்டமாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், இந்த மோசடியின் பின்னணியில் பெரிய அளவிலான உள்கட்டமைப்பு மாபியா மற்றும் உயர் அதிகாரிகள் இருக்கலாம் எனப் பக்தர்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள இக்கோவிலில் நடந்துள்ள இந்த ஆன்மீகப் பெரு மோசடியை தூத்துக்குடி மாவட்ட போலீசார் மட்டுமே விசாரித்தால் உண்மை வெளிவராது என்றும், எனவே இவ்வழக்கை உடனடியாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்ற அரசு உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

திருச்செந்தூர் கோவில் கடற்கரை மணலில் இந்து முன்னணியினர் மற்றும் பொதுமக்கள்  திரண்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஒற்றைக் காலில் நின்றபடி கண்டன கோஷங்களை எழுப்பினர்.  

இப்போராட்டத்திற்கு இந்து முன்னணி மாநிலத் துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார்  தலைமை தாங்கினார். மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் சக்திவேலன் முன்னிலை வகித்தனர்.

இந்து முன்னணி கோட்டச் செயலாளர் ஆறுமுகசாமி, தூத்துக்குடி மாவட்டத் தலைவர் முத்துராஜ், மாவட்டப் பொதுச்செயலாளர் ஜெயராம் திவான், மாவட்டச் செயலாளர் ரவிச்சந்தர் அருணாச்சலம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆனந்த், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ராகவேந்திரா,வெங்கடேஷ், தூத்துக்குடி மாவட்டத் தலைவர் இசக்கி முத்துக்குமார் உட்பட  இந்து முன்னணி அமைப்பின் முக்கியப் பொறுப்பாளர்கள் மற்றும் ஆன்மீகப் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *