தூத்துக்குடியில் பெண் பாலியல் வன்கொடுமை ; 3 பேர் கைது
தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு பெண் ஆஜராகி தான் பாலியல் வந்மொடுமை செய்யப்பட்டதாக புகார் அளித்தார்.

அந்த புகாரில “எனது சமூகத்தைச் சேர்ந்த தெரிந்த நபரான பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்த மோகித் என்பவர் அவரது இரு நண்பர்களுடன் சேர்ந்து எனது விருப்பத்திற்கு மாறாக என்னை அழைத்துச் சென்று மீன்பிடி துறைமுகம் அருகே பாலியல் வன்கொடுமை செய்ததாக” தெரிவித்தார்.
மேலும் தன்னிடம் இருந்த ரூ 2,500/- ரொக்கம், ஒரு கைப்பேசி மற்றும் இரண்டு வெள்ளி மோதிரங்களை ஆகியவற்றை அவர்கள் பறித்துச் சென்றதாகவும் புகாரில் கூறி இருந்த்தார்,’
இந்த புகாரின் அடிப்படையில், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பாரதிய நியாயச் சட்டம் (BNS) பிரிவுகள் 296(b), 126(2), 87, 115(2), 70(1), 309(4) மற்றும் 351(3) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர். சுனில் தலைமையில் அமைக்கப்பட்ட 4 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றம்சாட்டப்பட்ட அந்தோணிராஜ் மகன் மோகித் (25), ஜேசு நசரின் மகன் ரிதீஷ் (19) மற்றும் ஜெயக்குமார் திலோத் பெர்லின் (21) ஆகிய 3 பேர்களை சில மணி நேரங்களிலேயே கைது செய்தனர்,..
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.







