இளம் ஆக்கி வீரர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம்
Oplus_16908288

ராஜீவ் காந்தி விளையாட்டுக் கழக இளம் வீரர்களுக்கு ஒரு நாள் ஆக்கி பயிற்சி முகாம் கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

முன்னாள் இந்திய ஆக்கி வீரரும் இந்தியன் வங்கி ஆக்கி அணியின் பயிற்றுனரும் சென்னை இந்திரா காந்தி ஆக்கி அணி மற்றும் திருமால்வளவன் ஆக்கி அகடமி அணியின் நிறுவனருமான திருமால்வளவன் இளம் வீரர்களுக்கு பயிற்சி அளித்தார்.
இளம் வீரர்களுக்கு ஆக்கி விளையாட்டின் நுணுக்கங்கள் மற்றும் விளையாடுவதினால் பெரும் நன்மைகள் பற்றி எடுத்துரைத்தார்.
முன்னதாக சிறப்பு விருந்தினர் திருமால்வளவனை இளம் வீரர்களுக்கு ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி அறிமுகம் செய்து வைத்தார் .

ராஜீவ் காந்தி விளையாட்டுக்கழக வீரர்கள் தமிழக அணிக்காக தேர்வு பெற்று தேசிய போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் அம்சக்கனி, ஜெகதீஸ்வரன், செல்வ முகில், ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. பொருளாளர் காளிமுத்து பாண்டியராஜா, முன்னாள் ராணுவ ஆக்கி வீரர்கள் காளிதாஸ், தனசேகரன், ராஜீவ் காந்தி விளையாட்டு கழக பயிற்சியாளர் வேல்முருகன், கவின், பேபி ஆகியோர் கலந்து கொண்டனர்







