கோவில்பட்டியில் சி. பா. ஆதித்தனார் நினைவு தினம்
Oplus_16908288
தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகரும், அமைச்சருமான ‘தினத்தந்தி’ நிறுவனர் தமிழர் தந்தை சி. பா ஆதித்தனார் 45-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி கோவில்பட்டி கடலையூர் ரோட்டில் உள்ள அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு இளந்தமிழர் கலை இலக்கிய பேரவை சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
பேரவை ஒருங்கிணைப்பாளர் நாஞ்சில் குமார் தலைமை தாங்கினார். பேரவை தலைவர் விக்னேஷ் முன்னிலை வகித்தார். கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் ஆர். எஸ். ரமேஷ், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன் ஆகியோர் சி.பா. ஆதித்தனார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பேரவை செயலாளர் பிரபு, பொருளாளர் மைக்கேல் அமலதாஸ், தங்கபாண்டியன், த.மா.க. வடக்கு மாவட்டத் தலைவர் ராஜகோபால், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாவட்ட துணைத் தலைவர் தவமணி, வேலாயுதபுரம் கிளை மன்ற தலைவர் முருகன், கூட்டமைப்பு பொருளாளர் கருப்பசாமி, நாம் தமிழர் கட்சி நல்லையா, த.வெ.க. வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சுமங்கலி ராஜா, ராமமூர்த்தி, கருப்பசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.







