பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு எஸ்.எஸ்.டி.எம்.கல்லூரி சார்பில் புத்தகங்கள் பரிசு
கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் (எஸ்.எஸ்.டி.எம./.) கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளி அளவில் அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ1000 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசாக வல்ன்க்கப்பட்டன,

மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கவும், நல்ல புத்தகங்களை தேர்வு செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி,வ உ சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஊத்துப்பட்டி,காளாம்பட்டி, இளையரசனேந்தல், வில்லிசேரி உள்ளிட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ1,000 மதிப்பிலான புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன,
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பின்புறம் அமைந்துள்ள விஸ்வா மீட்டிங் ஹாலில் மே 15ம்தேதி முதல் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது, இங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மானவிகளை வரவழைத்து அவர்களுக்கு விருப்பிய புத்தகங்களை தேர்வு செய்ய சொல்லி பரிசளிக்கப்பட்டது,
இந்த புத்தக பரிசினை கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத் தலைவரும், நகர் மன்ற தலைவருமான ஆர்.எஸ் ரமேஷ் வழங்கினார். மொத்தம் 10 பேர் இந்த பரிசை பெற்றனர்,
இந்நிகழ்ச்சிக்கு எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினாரே,

கல்லூரி முதல்வர் செல்வராஜ்,கோவில்பட்டி வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புத்தக விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் ரவிவர்மா அனைவரையும் வரவேற்றார்.
எஸ்.எஸ்.டி.எம் கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர் அருண்,பேராசிரியர்கள் செல்வ லட்சுமி,பிரியங்கா,கோகிலா, ஸ்ருதி, ரமேஷ்,தலைமையாசிரியர்கள் முனியசாமி, முருகசரஸ்வதி உள்பட மாணவர்கள் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.புத்தக விற்பனையாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜபாண்டி நன்றி கூறினார்







