தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன், சமூக வலைதள பக்கத்தில் கூறி இருப்பதாவது:- “தூத்துக்குடி தொகுதியில் நடைபெற்று முடிந்த தேர்தலில், வேட்பாளர்களின் தகுதி மற்றும் அவர்கள் செய்த மக்கள் பணிகளை பொருட்படுத்தாமல், சரியான அரசியல் புரிதல் இல்லாமல் வாக்களிக்கப்பட்டதே இந்த தோல்விக்குக் காரணம். கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் தங்களது பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றியுள்ளனர். சிலர் தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக, தேவையற்ற குற்றச்சாட்டுகளை […]
கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சார் ஆட்சியர் ஹிமான்ஷு மங்கள், காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் , வட்டார போக்குவரத்து அலுவலர் கிரிஜா ஆகியோர் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பெலிக்சன் மாசிலாமணி, தீயணைப்பு நிலைய அலுவலர் மலையாண்டி ஆகியோர் அடங்கியகுழுவினரால் பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்டு 340 பள்ளி வாகனங்கள் உள்ளன. அவற்றில் 187 வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வாகனங்கள் பராமரிப்பு, வேக கட்டுப்பாடு, பிரேக் செயல்பாடு, இருக்கை […]
கோவில்பட்டி அருகே யுள்ள ஈராச்சி கிராமத்தில் வீர காளியம் மன் கோவில் சித் திரை திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது இந்த திருவிழாவை முன் னிட்டு மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் ஏற்பாடு செய்யப்பட்டிருந் தது சின்னமாட்டு வண்டி, பூஞ்சிட்டு மாட்டு வண்டி என இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. இதில் 12 சின்ன மாட்டு வண்டிகளும், பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் 25 மாட்டு வண்டிகள் என 37 மாட்டு வண்டிகள் போட்டியில் பங்கேற்றன சாலையில் […]
சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்ததன் எதிரொலியாக அதிமுகவில் உள்கட்சி மோதல் மீண்டும் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு தரப்பும்,சிவி சண்முகம் -எஸ்.பி வேலுமணி தலைமையில் ஒரு தரப்பினரும் இயங்கி வருகிறார்கள். சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு ஆதரவாக வேலுமணி தரப்பை சேர்ந்த 25 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். அதேபோல் எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த 22 பேர் தவெக அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி உள்பட 22 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் […]
திட்டமிடுவோம்,தீவிரமாக உழைப்போம், மீண்டு வருவோம்! மீண்டும் வெற்றி பெறுவோம்; மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்
தமிழ்நாட்டில் சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளின் ஆட்சிக்கு மாற்றாக ஒரு புதிய ஆட்சி அமைந்துள்ளது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வெற்றிபெற்ற விஜய் தலைமையிலான த.வெ.க., ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. . முதல்-அமைச்சராக விஜய் பதவி ஏற்றுள்ளார். தி.மு.க. தனித்து 60 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்று உள்ளது. ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்து விட்டார். தேர்தல் தோல்வியை அடுத்து சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவராக […]
கோவில்பட்டி வ. உ. சி நகரைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் பாலாஜி. இவர் தனது காரில் உறவினர்களுடன் மதுரையில் உள்ள பாண்டி கோவிலுக்கு சென்று விட்டு கோவில்பட்டி திரும்பினார். எட்டையாபுரம் வழியாக கோவில்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார், எட்டையாபுரம் – குமாரகிரி இடையே கார் வந்த போது காரின் எஞ்சின் பகுதியில் இருந்து அதிகமாக புகை வருவதை பார்த்த பாலாஜி காரை சாலையோரம் நிறுத்தினர். காரில் இருந்த அனைவரும் கீழே இறங்கி காரை விட்டு சிறிது தூரம் […]
சட்டசபையில் த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளித்த விவகாரம் அ.தி.மு.க.வில் புயலை கிளப்பியுள்ளது. இதையடுத்து எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் உள்பட 26 பேரின் மாவட்ட செயலாளர் பதவியை பறித்து எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை எடுத்தார் இந்தநிலையில், சென்னை , ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி. சண்முகம் ஆகிய இரு தரப்பினருக்கும் இடையே நிலவி வரும் மோதல் போக்கால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் […]
தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா 27 இடங்களில் போட்டியிட்டது. பா.ஜனதாவின் வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரிகள் தமிழகத்தில் முகாமிட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்ட னர். ஆனால், தேர்தல் முடிவுகள் வந்தபோது, ஒரு இடத்தில் மட்டும் பா.ஜனதா வெற்றி பெற்றது. மற்ற இடங்களில் மோசமான தோல்வியை தழுவியது. தாமரை சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணி கட்சியினரும் தோல்வியை தழுவினர். பா.ஜனதாவின் நட்சத்திர வேட்பாளர்க ளான மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், டாக்டர் தமிழிசை […]
தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களை பிடித்தது. தி.மு.க. கூட்டணி 73 இடங்களுடன் 2-வது இடத்தையும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களு டன் 3-ம் இடத்துக்கும் தள்ளப்பட்டது. அக்கட்சி மட்டும் 47 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கடந்த 2021 தேர்தலில் ஆட்சியை இழந்து இருந்த அ.தி.மு.க., இந்த முறையும் தோல்வியை சந்தித்ததால், கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி என்ற பேச்சு எழுந்த நிலையில், அ.தி.மு.க.வில் இரு வேறு கருத்து […]
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடைவிதிக்கக்கோரி நாடு முழுவதும் வரும் 20-ம் தேதி மருந்தகங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன. சுமார் 12.4 லட்சம் மருந்தகங்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதால் மருந்து விநியோகம் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக அகில இந்திய மருந்தக உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- முறைப்படுத்தப்படாத ஆன்லைன் மருந்து விற்பனையால் நோயாளிகளின் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. முறையான சரிபார்ப்பு இன்றி மருந்துகள் விநியோகிக்கப்படுவதால், ஒரே மருந்துச் […]







