கோவில்பட்டியில் 187 பள்ளி வாகனங்கள் ஆய்வு; குறைகள் கண்டறிந்து நடவடிக்கை

கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சார் ஆட்சியர் ஹிமான்ஷு மங்கள், காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் , வட்டார போக்குவரத்து அலுவலர் கிரிஜா ஆகியோர் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பெலிக்சன் மாசிலாமணி, தீயணைப்பு நிலைய அலுவலர் மலையாண்டி ஆகியோர் அடங்கியகுழுவினரால் பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்டு 340 பள்ளி வாகனங்கள் உள்ளன. அவற்றில் 187 வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
வாகனங்கள் பராமரிப்பு, வேக கட்டுப்பாடு, பிரேக் செயல்பாடு, இருக்கை வசதி, படிக்கட்டுகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் பரிசோதித்து சரியான முறையில் இருக்கிறதா? என்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் 16 வாகனங்களின் குறைகள் கண்டறியப்பட்டு, அதனை நிவர்த்தி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.







