திமுகவினர் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியது அவசியம் ; கீதா ஜீவன்
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன், சமூக வலைதள பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

“தூத்துக்குடி தொகுதியில் நடைபெற்று முடிந்த தேர்தலில், வேட்பாளர்களின் தகுதி மற்றும் அவர்கள் செய்த மக்கள் பணிகளை பொருட்படுத்தாமல், சரியான அரசியல் புரிதல் இல்லாமல் வாக்களிக்கப்பட்டதே இந்த தோல்விக்குக் காரணம்.
கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் தங்களது பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றியுள்ளனர்.
சிலர் தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக, தேவையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். அவற்றை யாரும் நம்ப வேண்டாம். திமுக தோல்வியால் தளரக்கூடிய இயக்கமல்ல.

இத்துடன், கட்சியினர் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியது அவசியம் , எதிர்காலத்தில் வெற்றியை நோக்கி ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.
இவ்வாறு கீதா ஜீவன் கூறியுள்ளார்







