கோவில்பட்டி அருகேமாட்டு வண்டி பந்தயம்
Oplus_16908288
கோவில்பட்டி அருகே யுள்ள ஈராச்சி கிராமத்தில் வீர காளியம் மன் கோவில் சித் திரை திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது இந்த திருவிழாவை முன் னிட்டு மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் ஏற்பாடு செய்யப்பட்டிருந் தது

சின்னமாட்டு வண்டி, பூஞ்சிட்டு மாட்டு வண்டி என இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. இதில் 12 சின்ன மாட்டு வண்டிகளும், பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் 25 மாட்டு வண்டிகள் என 37 மாட்டு வண்டிகள் போட்டியில் பங்கேற்றன

சாலையில் சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை பொதுமக்கள் சாலையின் இருபுறமும் இருந்து ஆர் வமுடன் கண்டுகளித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி மற்றும் அதன் சாரதிகளுக்கு ரொக்கப்பணம் மற்றும் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர்.







