எட்டையபுரம் அருகே கார் தீப்பிடித்து எரிந்து நாசம்
கோவில்பட்டி வ. உ. சி நகரைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் பாலாஜி. இவர் தனது காரில் உறவினர்களுடன் மதுரையில் உள்ள பாண்டி கோவிலுக்கு சென்று விட்டு கோவில்பட்டி திரும்பினார்.

எட்டையாபுரம் வழியாக கோவில்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார், எட்டையாபுரம் – குமாரகிரி இடையே கார் வந்த போது காரின் எஞ்சின் பகுதியில் இருந்து அதிகமாக புகை வருவதை பார்த்த பாலாஜி காரை சாலையோரம் நிறுத்தினர்.
காரில் இருந்த அனைவரும் கீழே இறங்கி காரை விட்டு சிறிது தூரம் தள்ளி சென்றனர். இதனை தொடர்ந்து சில நொடிகளில் கார் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரித தோப்ங்கியது,
இதையெடுத்து பாலாஜி எட்டயபுரம் போலீசார் மற்றும் கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு நிலைய அலுவலர் மலையாண்டி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.’

அவர்கள் பற்றி எரிந்து கொண்டிருந்த கார் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருந்தபோதிலும் கார் முற்றிலுமாக தீயில் எரிந்து நாசமானது,.
காரின் எஞ்சின் பகுதியில் இருந்து புகை வந்ததும் பாலாஜி கார நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எட்டையாபுரம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்







